1843.
|
நிறைவில்
புறங்காட்டிடைநே ரிழையோடும்
இறைவில் லெரியான் மழுவேந் திநின்றாடி
மறையின் னொலிவா னவர்தா னவரேத்தும்
குறைவில் லவனூர் குரங்கா டுதுறையே. 3
|
1844.
|
விழிக்குந்
நுதன்மே லொருவெண் பிறைசூடித்
தெழிக்கும் புறங்காட் டிடைச்சேர்ந் தெரியாடிப்
பழிக்கும் பரிசே பலிதேர்ந் தவனூர்பொன்
கொழிக்கும் புனல்சூழ் குரங்கா டுதுறையே. 4 |
சுடுகாட்டில் நின்று
எரியாடுபவனும், வண்டுகள் மொய்க்கும் மெல்லிய
கூந்தலை உடையவளாகிய உமையம்மையை ஒருபாகமாகக்
கொண்டவனுமாகிய சிவபிரானது நகர் குரங்காடுதுறை.
கு-ரை:
விண்டார்-பகைவர்; விமலன்-மலமில்லாதவன். இண்டு-
புலிதொடக்கிக்கொடி. மென்குழல் மங்கை-இத்தலத்தின் அம்பிகையின்
திருப்பெயராயிருக்கலாம். கொண்டான்-கொண்ட சிவபிரான்.
வினையாலணையும் பெயர். கொண்டானது நகர் போலுமென்க.
3. பொ-ரை: நிறைதல்
இல்லாத சுடுகாட்டுள் நின்று அழிவற்ற
எரியைக் கையில் உடையவனாய் மழு ஏந்தி உமையம்மையோடு
ஆடுபவனும், வேத ஒலியால் தேவர், அசுரர் ஆகியோரால் தொழப்படும்
குறைவற்றவனும் ஆகிய சிவபிரானது ஊர், குரங்காடுதுறை.
கு-ரை: நிறைவு
இல் புறங்காடு-எல்லார் புறனும் தான் கண்டு
உலகத்து மன்பதைக்கெல்லாம் தானாய்த் தன்புறங்காண்போர்க் காண்
பறியாது (புறம்-356) என்று கூறப்பட்ட புறங்காடு இனிவரும் பிணத்திற்கு
இங்கு இடமில்லை என்று நிறைதல் என்றும் இல்லாதது. இறைவு-இறைதல்
(அழிதல்). இல்-இல்லாத. எரியான்-தீயுடையவன். சிவபிரான் ஏந்திய தீக்கு
என்றும் அழிவில்லை. ஆடி-பெயர்ச்சொல். தானவர்-அசுரர். குறைவு
இல்லான்-குறைவிலா நிறைவினன்.
4. பொ-ரை:
விழியை உடைய நெற்றியின்மேல் தலையின்
முன்பாகத்தில் பிறைசூடி, ஒலிக்கும் சுடுகாட்டை அடைந்து எரியாடி,
எல்லோரும் பழித்துரைக்கப் பலியேற்றுத்திரியும் சிவபிரானது ஊர்
பொன் கொழிக்கும் காவிரி நீரால் சூழப்பட்ட குரங்காடுதுறையாகும்.
|