35.
திருத்தென்குரங்காடுதுறை
|
பதிக
வரலாறு:
திருஞானசம்பந்தமூர்த்தி
நாயனார் திருவிடைமருதூரை வழிபட்டுப்
பாடித் திருநாகேச்சுரத்தையும் பணிந்து, மற்றும் நற்பதிபல நண்ணிப்
போற்றிக் குரங்காடுதுறையை அணைந்து, குழகனார் குரைகழல்களைப்
பெருங்காதலால் பேணிய இன்னிசை பெருக அருள்செய்தது இந்த
அருங்கலை நூற்றிருப் பதிகம்.
பண்:
இந்தளம்
ப.தொ.எண்:
171 |
|
பதிக
எண்: 35 |
திருச்சிற்றம்பலம்
1841.
|
பரவக்
கெடும்வல் வினைபா ரிடஞ்சூழ
இரவிற் புறங்காட் டிடைநின் றெரியாடி
அரவச் சடையந் தணன்மே யவழகார்
குரவப் பொழி்ல்சூழ் குரங்கா டுதுறையே. 1 |
1842.
|
விண்டார்
புரமூன்று மெரித்த விமலன்
இண்டார் புறங்காட் டிடைநின்றெரி யாடி
வண்டார் கருமென் குழன்மங் கையொர்பாகம்
கொண்டா னகர்போல் குரங்கா டுதுறையே. 2 |
1.
பொ-ரை: பூதகணங்கள் சூழ இரவில் சுடுகாட்டில் நின்று எரி
ஆடுபவனும், அரவணிந்த சடையினை உடைய அந்தணனும் ஆகிய
சிவபிரானது குராமரப் பொழில் சூழ்ந்த குரங்காடுதுறையைப் பரவ வலிய
வினைகள் கெட்டொழியும்.
கு-ரை:
குரங்காடுதுறை பரவ வல்வினை கெடும் என்றியைக்க.
பாரிடம்-பூதகணம். ஆடி-பெயர்ச்சொல். அந்தணன்-அறவாழி யந்தணன்.
மேய-எழுந்தருளிய. (மேவிய-விரும்பிய) குரவம்-குராமரம். பரவுதல் முன்
நின்று துதித்தல்.
2.
பொ-ரை: தன்னோடு பகை பூண்டவராகிய அசுரர்களின்
முப்புரங்களையும் எரித்தழித்த விமலனும், இண்டங்கொடிகள் படர்ந்த
|