பக்கம் எண் :

500

சந்தமிகு ஞானமுணர் பந்தனுரை பேணி
வந்தவண மேத்துமவர் வானமுடை யாரே. 11

                     திருச்சிற்றம்பலம்  


     கு-ரை: முன் உள்ள பாக்கள் 4, 5, 7, 9 காண்க. ஏத்தும்
பந்தம்-வழிபட்டு நிற்கும் அருளுறவு. ஆர-நிறைய. ஞானம் உணர்பந்தன்
என்று திருப்பெயர் பொருள் விளக்குமாறுணர்க. பேணி-விரும்பி. பதிகம்
165 முடிவிலும் இவ்வடி அமைந்தமை காண்க.

திருஞானசம்பந்தர் புராணம்

அனைய செய்கையால் எதிர்கொள்ளும் பதிகளா னவற்றின்
வினைத ரும்பவந் தீர்ப்பவர் கோயில்கள் மேவிப்
புனையும் வண்டமிழ் மொழிந்தடி பணிந்துபோந் தணைந்தார்; பனைநெ டுங்கைமா உரித்தவர் மகிழ்பெரும் பழுவூர்.

அங்கணைந் திளம்பிறை அணிந்த சென்னியார்
பொங்கெழிற் கோபுரந் தொழுது புக்கபின்
துங்கநீள் விமானத்தைச் சூழ்ந்து வந்துமுன்
பங்கயச் சேவடி பணிந்து பாடுவார்.

மண்ணினிற் பொலிகுல மலையர் தாந்தொழு(து)
எண்ணில்சீர்ப் பணிகள்செய் தேத்துந் தன்மையில்
நண்ணிய வகைசிறப் பித்து நாதரைப்
பண்ணினில் திகழ்திருப் பதிகம் பாடினார்.

                                -சேக்கிழார்.