பக்கம் எண் :

499

1839.



மொட்டையம ணாதர்துகின் மூடுவிரி தேரர்
முட்டைகண் மொழிந்தமுனி வான்றனிட மென்பர்
மட்டைமலி தாழையிள நீரதிசை பூகம்
பட்டையொடு தாறுவிரி கின்றபழு வூரே. 10
1840.

அந்தணர்க ளானமலை யாளரவ ரேத்தும்
பந்தமலி கின்றபழு வூரரனை யாரச்


களையும் உணர்ந்தவர்கள் பொது இடங்களிலிருந்து மகிழ்ந்துறையும்
ஊராகிய பழுவூர் என்பர்.

     கு-ரை: ஒன்றும்-தனிமுதலாகிய சிவபெருமானையும். இருமூன்றும்-
ஆறு அங்கங்களாய் வேதார்த்த சாதகமாயுள்ள வற்றையும். ஒருநாலும்-
நாலு வேதங்களையும், உணர்வார்கள்-உணரும் அந்தணர். மன்று-அம்பலம்,
சபை, (பெரிய, திருநீல கண்ட) ‘அருமறை யோடாறங்கம் ஆய்ந்துகொண்டு
பாடினார் நால்வேதம்’ (தி.6 பதி.83 பா.5) என்பதில் மறையும் வேதமும்
வெவ்வேறு ஆதல்அறிக.

     10. பொ-ரை: முண்டிதமான தலையை உடைய அமணர்களாகிய
அறிவிலிகளும் ஆடையைவிரித்து உடலைப் போர்த்த தேரர்களும் ஆகிய
குற்ற முடையோர் கூறுவனவற்றை ஏலாத இறைவனது இடம், மட்டைகள்
நிறைந்த தென்னையினது இளநீர்களும் கமுக மரங்களின் பாக்குப்
பட்டைகளோடு கூடிய பாக்குக் குலைகளும் நிறைந்த பழுவூர் என்பர்.

     கு-ரை: அமண் ஆதர்-சமணராகிய அறிவிலிகள். ஆதம்- 
அறிவின்மை. மொட்டை-தலைமயிர் பறித்தலால் ஆனது. முட்டைகள் -
வழுவினர், குறைவினர், வறியர், பதர்கள் எனப் பல பொருளும்
பொருந்தும். மொழிந்த-சொல்லியவை. முனிவான்-வெறுப்பவன். இளநீரது
என்க. இசை-இசைந்த. பூகம்-பாக்குமரம். தாறு-குலை.

     11. பொ-ரை: மலையாள அந்தணர்கள் ஏத்தும் அருளுறவு நிறைந்த
பழுவூர் இறைவனை ஞானசம்பந்தன் மனம் ஆரச் சந்த இசையால் பாடிய
இப்பாடல்களை விரும்பித் தமக்கு இயன்ற இசையோடு ஏத்தித் தொழுபவர்
சிவலோகம் பெறுவர்.