1837.
|
உரக்கடல்
விடத்தினை மிடற்றிலுற வைத்தன்
றரக்கனை யடர்த்தருளு மப்பனிட மென்பர்
குரக்கினம் விரைப்பொழிலின் மீதுகனி யுண்டு
பரக்குறு புனற்செய்விளை யாடுபழு வூரே. 8 |
1838.
|
நின்றநெடு
மாலுமொரு நான்முகனும் நேட
அன்றுதழ லாய்நிமிரு மாதியிட மென்பர்
ஒன்றுமிரு மூன்றுமொரு நாலுமுணர் வார்கள்
மன்றினி லிருந்துடன் மகிழ்ந்தபழு வூரே. 9 |
கு-ரை:
மந்தணம்-இரகசியம். மாமடி-மாமன்; தக்கன். வேள்வி-யாகம்.
சிந்த-அழிய. விளையாடு-வீரபத்திராய்ச் சென்று போர்விளையாட்டைச்
செய்த. யாகத்தைப் போராக்கொள்ளாது விளையாட்டாக் கொண்டழித்த
என்றபடி. சுருதியான் தலையும் நாமகள் மூக்கும் சுடரவன் கரமும் முன்
இயங்கு பரிதியான் பல்லும் இறுத்து அவர்க்கு அருளும் பரமனார் (தி.3
ப.376 பா.5) என்று பின்னும், ஆசிரியர் அவ்விளையாட்டைக்
குறித்தருளுமாறறிக. ஆர்-பொருந்துகின்ற (மாதர்). சுவடு-அடிச்சுவடு. அகில்
தூபவர்க்கங்களுள் ஒன்று. மட்டு-தேன். ஆர்-ஆர்கின்ற, உண்ணுகின்ற.
கருப்பு மட்டு வாய்மடுத்து திருவாசகம் (பதி.80 பா.5)
8. பொ-ரை:
வலிய கடலிடை எழுந்த நஞ்சினை மிடற்றிடை
வைத்துள்ளவனும், அக்காலத்தில் இராவணனை அடர்த்து அருள் செய்த
தந்தையும் ஆகிய சிவபிரானது இடம், குரங்குகள் மணமுடைய பொழிலின்
மீது ஏறிக் கனிவகைகளை உண்டு நீர் பரவிய வயல்களில் விளையாடும்
பழுவூர் என்பர்.
கு-ரை:
உரம்-வலிமை. மிடற்றில்-கழுத்தில். குரங்கு இனம்-குரக்கினம்.
(வலித்தல் விகாரம்). விரை-மணம். பரக்கு-பரத்தல். புனல் செய்-நீர்வளமிக்க
வயல். குரங்கினம் கனியுண்டு செய்யில் விளையாடும் ஊர் என்க.
புணர்ச்செய் என்ற பழைய பாடத்திற்குக் கலவி பொருளாகும். புணர்தலைச்
செய்யும் விளையாட்டு.
9. பொ-ரை:
உயர்ந்து நின்ற திருமாலும் நான்முகனும் தேடுமாறு
அன்று அழலுருவாய் ஓங்கி நிமிர்ந்த தலைவனது இடம், சிவபரம்
பொருளாகிய ஒருவனையும், நால்வேதங்களையும் ஆறு அங்கங்
|