பக்கம் எண் :

497

வேதமொழி சொல்லிமறை யாளரிறை வன்றன்
பாதமவை யோதநிகழ் கின்றபழு வூரே. 5
1835.



மேவயரு மும்மதிலும் வெந்தழல் விளைத்து
மாவயர வன்றுரிசெய் மைந்தனிட மென்பர்
பூவையை மடந்தையர்கள் கொண்டுபுகழ் சொல்லிப்
பாவையர்கள் கற்பொடு பொலிந்தபழு வூரே. 6
1836.



மந்தண மிருந்துபுரி மாமடிதன் வேள்வி
சிந்தவிளை யாடுசிவ லோகனிட மென்பர்
அந்தணர்க ளாகுதியி லிட்டவகின் மட்டார்
பைந்தொடிநன் மாதர்சுவ டொற்றுபழு வூரே. 7


இடம் மறையாளர் வேதங்களை ஓதி இறைவனின் திருவடிப்
பெருமைகளைப் பாடும் பழுவூர் என்பர்.

     கு-ரை: ‘கோயில் சுடுகாடு’ என்றது, திருவாசகம் மறையாளர் -
(மலையாளத்து) வேதியர். ’ஏத்த’ பின்னோர் பாடம்.

     6. பொ-ரை: தங்கள் மீது மேவுதலால் துயர் செய்வனவாகிய
மும்மதில்களையும் வெந்தழலால் அழித்தும், யானையை அயருமாறு
செய்து அதன் தோலை உரித்துப் போர்த்தும் வீரம் விளைவித்த
சிவபிரானது இடம், நாகண வாய்ப் பறவைக்கு இறைவன் புகழைக்
கற்பித்துப் பேச வைக்கும் பெண்கள் கற்பொடு விளங்கும் பழுவூர்
என்பர்.

     கு-ரை: மேவு அயரும்-பொருந்துவதால் துயர் உறுத்தும், மேவ
அயரும் எனலுமாம் தழல்-தீ. விளைத்து-தோற்றி. மா-யானை. உரிசெய்-
உரித்தலைச் செய்த.்மைந்தன்-வீரன். பூவை-நாகணவாய்ப் பறவை.
‘பொற்பில் நின்றன பொலிவு’ அப்பொற்பு, கற்பால் நீடுநிற்கும்.
கற்பிலார்பொற்புக் கடிதில் அழிவது கண்கூடு.

     7. பொ-ரை: இரகசிய ஆலோசனைகளுடன் மாமனாகிய தக்கன்
செய்த வேள்வி அழியுமாறு செய்த சிவபெருமானது இடம், அந்தணர்கள்
செய்த வேள்விகளால் அகிலின் மணம் கமழ்வதும் அணிகலன்கள் அணிந்த
அழகிய பெண்களின் காலடிச் சுவடுகள் உடையதுமான பழுவூர் என்பர்.