பக்கம் எண் :

496

1833.



எண்ணுமொ ரெழுத்துமிசை யின்கிளவி தேர்வார்
கண்ணுமுத லாயகட வுட்கிடம தென்பர்
மண்ணின்மிசை யாடிமலை யாளர்தொழு தேத்திப்
பண்ணினொலி கொண்டுபயில் கின்ற பழுவூரே. 4
1834.

சாதல்புரி வார்சுடலை தன்னில்நட மாடும்
நாதனமை யாளுடைய நம்பனிட மென்பர்


(பதி.157 பா.1) ‘பார்த்ததுவும் அரணம்படர் எரிமூழ்கவே’ (பதி.212. பா.5)
‘கடை நவில் மும்மதிலும் எரி ஊட்டிய கண்ணுதலான்’ (பதி.319. பா.3)
‘முதுமதிள் வெவ்வழல் கொளநனி முனிபவர்’ (பதி. 342. பா.4) ‘நெடுமதில்
ஒருமூன்றும் கொலையிடைச் செந்தீ வெந்தறக்கண்ட குழகனார்’ (பதி. 376
பா.7)என்று பிறாண்டும் ஆசிரியர் அருளியவாறறிக. ‘மதில் மூன்றுடைய
அறவைத் தொழில் புரிந்து அந்தரத்தே செல்லும் மந்திரத்தேர்ப்
பறவைப்புரம்’ (தி.4 பதி.111. பா.7) என்னும் திரிபுரத்தின் இயல்பையுணர்க.
போலிய-போன்ற; தடத்தமென்றபடி. வேலி-வயலிலுள்ள, விரை-மணம்.
கமலம்-தாமரை. அன்ன-போன்ற. பால் என-பால்போல இனியது என்ன.
மிழற்றி-பாடி (க் கொண்டு) பாடி ஆடும் (வளமுடைய) பழுவூர்.

     4. பொ-ரை: எண், எழுத்து, இசை இவற்றை ஆராய்வளர் கருதும்
முதற்பொருளாய கடவுளின் இடம், மலையாள அந்தணர் உலகில் பாடியாடித்
தொழுது ஏத்திப்பாடி வழிபடும் பழுவூர் என்பர்.

     கு-ரை: எண்ணும் எழுத்தும் இசையின் கிளவி (யும்) தேர்வார்
கண்ணும் முதல் ஆய கடவுள்-எண்ணையும் எழுத்தையும் இசையொடுகூடிய
இனிய கிளவியையும் ஆராய்வார் கருதும் முதற்பொருளாகிய கடவுள்.
‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்’ ‘எண்ணென்ப ஏனை எழுத்தென்ப’
என்புழிப் போல ஈண்டும் இருபொருள் கொள்ளல் பொருந்தும். ‘எண்ணும்
எழுத்தும் குறியும் அறிபவர் தாமொழியப் பண்ணின்
இசைமொழிபாடியவானவர் தாம்பணிவார் திண்ணென் வினைகளைத்தீர்க்கும்
பிரான்’ (தி.4ப.90 பா.6). மலையாளர் ஆடியும் தொழுதும் ஏத்தியும் பாடியும்
பயில்கின்ற பழுவூர் என்றதால், அத்தலத்தில் ‘அந்தணர்களான மலையாளர்’
வந்து செய்யுந் திருத்தொண்டு, ஆசிரியர் கண்கூடாக் கண்டவுண்மையாதல்
விளங்கும். இப்பதிகத்தின் திருக்கடைக்காப்பிற் காண்க.

     5. பொ-ரை: இறந்தவர்களை எரிக்கும் சுடலையில் நடனமாடும்
நாதனும் நம்மை ஆளாக உடைய நம்பனும் ஆகிய சிவபெருமானது