பக்கம் எண் :

495

1831.



கோடலொடு கோங்கவை குலாவுமுடி தன்மேல்
ஆடரவம் வைத்தபெரு மானதிட மென்பர்
மாடமலி சூளிகையி லேறிமட வார்கள்
பாடலொலி செய்யமலி கின்றபழு வூரே. 2
1832.



வாலிய புரத்திலவர் வேவவிழி செய்த
போலிய வொருத்தர்புரி நூலரிட மென்பர்
வேலியின் விரைக்கமல மன்னமுக மாதர்
பாலென மிழற்றிநட மாடுபழு வூரே.    3


விரிந்து பெருகிய மறை (நூல்களை அருளிய) முதல்வன். அத்தன்-
தலைவன். மை-மேகம். தழை-தழைக்கின்ற. (பொழில்). வாசம்-மணம்.
பத்தர்-பத்துடையர். பத்து-பற்று, அன்பு. பக்தி என்னும் வடசொற்றிரிபுமாம்.
சித்தர்-சித்துடையர். சித்தத்தார் என்பதுசித்தம் அடியாகத் தோன்றும் பெயர்.
பயில்கின்ற பழுவூர் என்றதால், நம் ஆசிரியர் காலத்து இருந்த
அத்திருத்தலத்தின் சிறப்பு விளங்குகின்றது. பழுவூரே இடமென்பர் என்று
பாடல்தோறும் இயைத்துக்கொள்க.

     2. பொ-ரை: வெண்காந்தள் மலரும் கோங்கமலரும் சூடிய,
முடிமேல் ஆடும் அரவினையும் அணிந்துள்ள, பெருமானின் இடம்,
பெண்கள் மாடங்களின் உச்சியில் ஏறிப்பாடும் ஒலி நிறைந்துள்ள பழுவூர்
என்பர்.

     கு-ரை: கோடல்-வெண்காந்தள் மலர். கோங்கு-கோங்க மலர்.
மாடம்-உயரிய வீடு. சூளிகை-வீட்டின் உச்சி. மலிதல் இரண்டும் தலத்தின்
செல்வச் சிறப்பைக் குறித்தன.

     3. பொ-ரை: பெரிய முப்புரங்களைத் தமது இல்லமாகக் கொண்ட
அவுணர் வெந்தழியுமாறு கண் விழித்த கோலத்தைக் கொண்ட
ஒப்பற்றவரும், முப்புரி நூலணிந்தவருமான சிவபெருமானது இடம்,
வயல்களில் முளைத்த தாமரைமலர் போன்ற முகத்தினராய மகளிர் பால்
போல இனிய சொற்களால் பாடல் பாடி நடம் புரியும் பழுவூர் என்பர்.

     கு-ரை: வாலிய-பெரிய. புரத்திலவர்-முப்புரத்தை இல்லமாக
உடையவர். புரத்தில் அவர்- எனலுமாம். அவர் பண்டறிசுட்டு.
வேவவிழிசெய்த-திரிபுரத்தைச் சிரித்தெரித்ததுமன்றி விழித் தெரித்ததும்
ஒருகற்பத்தில் நிகழ்ந்தது என்பர். ‘அரணம் அனலாகவிழித்தவனே’