பக்கம் எண் :

494

 34. திருப்பழுவூர்

பதிக வரலாறு:

     திருநெல்வெண்ணெய் முதலிய சிவ தலங்களை மெய்யன்பர்
பலரொடுந் தொழுது அருள்பெற்று மீளும்பொழுது, ஞானப் பாலூட்டிய
தேவியாரோடு தோணியப்பர் திருக்காட்சி, காழிக்கோமானார் திருவுள்ளங்
கொள்ளப் புகுந்து, அவரது உணர்வில் வெளிப்பட்டது. பாடலால்
உருகினார். புகலியை நண்ண மனம் வைத்தார். திருவரத்துறை யடிகளை
வணங்கிப் பேரருள் விடைகொண்டு போனார். உள்ளே நடங்கொண்டு
நிறைந்த பூங்கழலிணையை உச்சிமேற்கொண்டே முத்துச் சிவிகை
மேற்கொண்டார். மறையும் தமிழும் வயிரும் வளையும் காளமும் முரசும்
பிறவும் முழங்க, அன்பர் சூழ, பூரணகும்பங்களொடு நகரினர்
எதிர்கொள்ளத் தலம் பல வழிபட்டு மாதியலும் பாதியர் மகிழ்
பெரும்பழுவூர் சேர்ந்து அங்கு மலைநாட்டந்தணர் புரிந்த பணிகளையும்
பாராட்டிப் பாடியருளியது இத்திருப்பதிகம்.

                       திருவிராகம்

                     பண்: இந்தளம்

ப.தொ.எண்: 170                           பதிக எண்: 34

                     திருச்சிற்றம்பலம்

1830.



முத்தன்மிகு மூவிலைநல் வேலன்விரி நூலன்
அத்தனெமை யாளுடைய வண்ணலிட மென்பர்
மைத்தழை பெரும்பொழிலின் வாசமது வீசப்
பத்தரொடு சித்தர்பயில் கின்றபழு வூரே. 1


     1. பொ-ரை: இயல்பாகவே பாசங்களில் நீங்கியவன், மூவிலை
வடிவானவேலை உடையவன், விரிந்த வேதங்களை அருளியவன். தலைவன்
எம்மை ஆளாக உடைய முதல்வன். அவனது இடம் கரிய தழைகளை
உடைய பெரிய பொழிலின் மணம் கமழ்வதும், பத்தர் சித்தர் பயில்வதுமான
பழுவூர் என்பர்.

     கு-ரை: முத்தன்-இயல்பாகவே பாசம் இல்லாதவன். நல்மூவிலை
வேலன்-அழகிய திரிசூலப்படையினன். விரிநூலன்-