1865.
|
படர்செம்
பவளத் தொடுபன் மலர்முத்தம்
மடலம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
உடலம் முமைபங் கமதாகியு மென்கொல்
கடனஞ் சமுதா வதுவுண் டகருத்தே. 4
|
1866.
|
வானோர்
மறைமா தவத்தோர் வழிபட்ட
தேனார் பொழில்சூழ் மறைக்காட் டுறைசெல்வா
ஏனோர் தொழுதேத் தவிருந் தநீயென்கொல்
கானார் கடுவே டுவனா னகருத்தே. 5
|
1867.
|
பலகா
லங்கள்வே தங்கள்பா தங்கள்போற்றி
மலரால் வழிபாடு செய்மா மறைக்காடா |
4.
பொ-ரை:
படர்ந்த செம்பவளக் கொடிகள், பல்வகையான
மலர்கள், முத்துக்கள், மடல்கள் அவிழ்ந்த மலர்ப் பொழில்கள் ஆகியன
சூழ்ந்து விளங்கும் மறைக்காட்டில் உறையும் மைந்தனே! உன் திருமேனியில்
ஒருபாகமாக உமையம்மையைக் கொண்டவனாயிருந்தும் கடலில் எழுந்த
நஞ்சினை அமுதம்போல உண்டதன் கருத்து யாதோ?
கு-ரை:
மடல் - மரத்தில் உள்ள மடல்கள். பூவிதழுமாம். பங்க
மது-பாகத்தையுடையது. பாற்கடலினின்று எழுந்த நஞ்சினை உண்ட
கருத்தை வினாவியது.
5.
பொ-ரை: தேவர்கள், வேதங்களை உணர்ந்த பெரிய தவத்தினர்
ஆகியோர் வழிபட்ட தேன் நிறைந்த பொழில் சூழ்ந்த திருமறைக்காட்டில்
உறையும் செல்வனே! தன்னையல்லாத ஏனையோர் அனைவராலும் தொழுது
போற்றப்பெறும் பெருமையோடு இருந்த நீ காட்டுள் வாழும் வேடுவனாய்
உருக்கொண்ட காரணம் யாதோ?
கு-ரை:
வானோர்-தேவர்கள். மறை மா தவத்தோர் - வேதியரும்
பெருந்தவத்தருமாகிய பெரியோர். ஏனோர்-தானல்லாத பிறர்.
தன்னையேதான் பூசித்தவுண்மையும் அறிக. கான் - காடு. ஆர்
-பொருந்துகின்ற. கடு வேடுவன்-கொடிய வேடன். (தி.2 ப.3 பா. 1)
குழலியொடு வேடுவனாய். . . . விசயன் போரில் மிகு பொறை யளந்து
பாசுபதம் அளித்த கருத்தை வினாவியது. (தி.1 ப. 131 பா. 2)
6.
பொ-ரை: பலகாலங்கள் வேதங்கள் பாதங்களைப் போற்றி
மலரால் வழிபாடு செய்யும் மறைக்காட்டுள் எழுந்தருளி விளங்கும்
|