பக்கம் எண் :

518

  உலகே ழுடையாய் கடைதோறு முன்னென்கொல்
தலைசேர் பலிகொண் டதிலுண் டதுதானே.    6
1868.



வேலா வலயத் தயலே மிளிர்வெய்தும்
சேலார் திருமா மறைக்காட் டுறைசெல்வா
மாலோ டயனிந் திரனஞ் சமுனென்கொல்
காலார் சிலைக்கா மனைக்காய்ந் தகருத்தே.    7


இறைவனே! ஏழுலகங்களையும் தன் உடைமையாகக் கொண்டுள்ளவனே!
நீ பலர் வீடுகளுக்கும் சென்று தலையோட்டில் பலியேற்று அதில்
உண்டருளியதற்குக் காரணம் யாதோ! சொல்வாயாக.

     கு-ரை: இத்தலத்தில் நான்கு வேதங்களும் பலகாலம் பூசித்த
உண்மையை முதல் இரண்டடியிலும் உணர்த்தியருளினார்.

     உலகு ஏழ் உடையாய்-ஏழுலகுக்கும் சுவாமியே. ஜகதீசா! முன்
கடைதோறும் தலைசேர் பலிகொண்டு அதில் உண்டதுதான் ஏன்? என்று
இறைவன் பலியேற்ற வரலாற்றின் கருத்தை வினாவியது.

     7. பொ-ரை: விளங்கும் சேல்மீன்களைக் கொண்டுள்ள கடலின்
அயலே உள்ள திருமா மறைக்காட்டில் உறையும் செல்வனே! முற்காலத்தில்
திருமால், பிரமன், இந்திரன் ஆகியோர் அஞ்சுமாறு காலில் வைத்து
மிதித்துக் கணை பூட்டும் வில்லை ஏந்திய காமனை எரித்ததன் கருத்து
யாதோ?

     கு-ரை: வேலாவலயத்து அயல் - கடலின் பக்கத்தில்.
மிளிர்வு-விளங்குதல். சேல் - மீன். முன் மாலும் அயனும் இந்திரனும்
அஞ்சும் படி மன்மதனை எரித்ததன் கருத்து என்னை என்று வினாவியது.

     கால் ஆர் சிலை - வலக்காலால் மிதித்தல் பொருந்திய வில்.
“அறனிலாதான் வெஞ்சினக்கோலின் நோன்றாள் மிதித்து மெய்குழைய
வாங்கிச் செஞ்சிலை நெடுநாண்பூட்டித் திருவிரல் தெறித்துத்தாக்கி”
(திருவிளையாடல் - கூடற் - யானை எய்த. 29) சிலை எனப்படும்
மரத்தாற் செய்யப்படுதலின், ‘சிலை’ (கலி. 15-1. உரை) எனப்பட்டது.
‘சிலைவிற்கானவன்’ (குறுந். 385)