1869.
|
கலங்கொள்
கடலோ தமுலாவு கரைமேல்
வலங்கொள் பவர்வாழ்த் திசைக்கும் மறைக்காடா
இலங்கை யுடையா னடர்ப்பட் டிடரெய்த
அலங்கல் விரலூன் றியருள் செய்தவாறே. 8 |
1870.
|
கோனென்
றுபல்கோ டியுருத் திரர்போற்றும்
தேனம் பொழில்சூழ் மறைக்காட் டுறைசெல்வா
ஏனங் கழுகா னவருன் னைமுனென்கொல்
வானந் தலமண் டியுங்கண் டிலாவாறே. 9 |
8.
பொ-ரை: மரக்கலங்களைக் கொண்டுள்ள கடலின் ஓதம்
உலாவுகின்ற கரைமீது வலம் வருபவர் வாழ்த்தி இசைத்துப் போற்றுமாறு
விளங்கும் மறைக்காட்டில் விளங்கும் பெருமானே! இலங்கை மன்னன்
இராவணன் அடர்க்கப்பட்டு இடர் எய்துமாறு அசையும் உன் திருவடி
விரலால் ஊன்றிப் பின் அவனுக்கு அருள் செய்த காரணம் யாதோ?
கு-ரை:
கலம் - மரக்கலம். ஓதம் - நீர். கரைமேல் வலங்கொள்பவர்
- திருமறைக்காட்டில் வலம்வரும் முறைமை ஏனைய சிவதலங்களில் வலம்
வருதலினும் விசேடம் உடையது. திருக்கோயில் வலம்மட்டும் பிறதலங்களில்
நிகழும். இங்குத் திருமறைக்காட்டையே வலம் வருதல் வேண்டும். இதனை
ஆளுடைய அரசரும் மண்ணினார் வலம்செய் மறைக்காடார் என்று
குறித்தருளியது உணர்க. உடையான்-இராவணன். அடர் - முதல் நிலைத்
தொழிற்பெயர். அலங்கல்-அசைதல். அன்பர்கள் திருவடிக்கண் சார்த்திய
மாலையுமாம். ஆர் மின் ஆர்மின் நாண்மலர்ப் பிணையலில், தாள்
தளையிடுமின் (திருவாசகம் திருவண்டப்பகுதி 142-143) இராவணன்
கயிலையை எடுத்தபோது அடர்த்து அருள்செய்ததன் கருத்தை வினாவியது.
வினாச் சொல் வருவித்துரைக்க.
9.
பொ-ரை:
பலகோடி உருத்திரர்கள் தலைவன் என்று போற்றும்,
தேன் பொருந்திய அழகிய பொழில்கள் சூழ்ந்த மறைக்காட்டில் உறையும்
செல்வனே! பன்றியும் கழுகும் ஆன திருமால், பிரமர் உன்னை
முற்காலத்தே நிலத்தை அகழ்ந்து சென்றும், வானத்தில் பறந்து சென்றும்
கண்டிலர். அதற்குக் காரணம் யாதோ?
கு-ரை:
பல்கோடி உருத்திரர்கோன் என்று போற்றும் செல்வா
|