1871.
|
வேதம்
பலவோ மம்வியந் தடிபோற்ற
ஓதம் முலவும் மறைக்காட் டிலுறைவாய்
ஏதில் சமண்சாக் கியர்வாக் கிவையென்கொல்
ஆத ரொடுதா மலர்தூற் றியவாறே. 10
|
1872.
|
காழிந்
நகரான் கலைஞான சம்பந்தன்
வாழிம் மறைக்கா டனைவாய்ந் தறிவித்த
ஏழின் னிசைமாலை யீரைந் திவைவல்லார்
வாழி யுலகோர் தொழவா னடைவாரே. 11
|
திருச்சிற்றம்பலம்
என்று இயைக்க. நீலத்தார்
கரியமிடற்றார் நல்ல நெற்றிமேல் உற்ற
கண்ணினார் பற்று, சூலத்தார் சுடலைப்பொடி நீறணிவார் சடையார்,
சீலத்தார் தொழுதேத்து சிற்றம்பலம் (தி.3 பதி.1 பா.3) எனத்
தில்லையிற்கண்ட உருத்திரகண தரிசனத்தை உணர்த்தியவாறறிக. ஏனம் -
பன்றி. கழுகானவர்-பிரமனார். (தி.2, ப.168. பா.9) வானத்தில் கழுகும்
தலத்தில் ஏனமும் என இயைக்க, எதிர்நிரல்நிறை. அரியும் அயனும்
அடிமுடி தேடியதன் கருத்தை வினாவியது.
10. பொ-ரை:
வேதங்கள் பலவும் வேள்விகள் செய்து வியந்து
உன் திருவடிகளைப் போற்ற, கடல்நீர் உலவும் மறைக்காட்டில் உறைகின்ற
பெருமானே! வைதிக நெறியினர்க்கு அயலவராகிய சமணர் சாக்கியர்களாகிய
அறிவற்றவர்கள் உரைகளால் உம்மை அலர் தூற்றுதற்குக் காரணம் யாதோ?
கு-ரை:
ஓமம் - யாகம். மறைக்காடு என்றதன் பெயர்க் காரணம்
ஈண்டும் விளக்கியருளினார். ஓதம் - கடல். ஏதில் - அயல். ஏதிலார்
குற்றம் ஏதிலார் ஆர (திருக்குறள்) ஈண்டுச் சமயத்தால் அயலவராயினார்.
ஆதர்-அறிவின்மையுடையவர். அலர் - பழிச் சொல். அவைதிக மதத்தினர்
அழியாத வைதிக சைவ சமயத்தைப் பழித்துரைத்ததன் கருத்தை வினாவியது.
11.
பொ-ரை:
காழி நகரில் தோன்றிய கலைகளில் வல்ல ஞான
சம்பந்தன் வாழ்த்துதற்குரிய மறைக்காட்டில் உறையும் ஈசனைத் தரிசிக்கும்
பேறு வாய்த்து அறிவித்த ஏழிசை பொருந்திய இப்பதிகப் பாமாலையை
ஓதி வழிபட வல்லவர், வாழும் இவ்வுலகோர் தொழவான் அடைவர்.
|