திருஞானசம்பந்தர்
புராணம்
அன்றர
சருளிச் செய்ய அருமறைப் பிள்ளை யாரும்
வென்றிவெள் விடையார் தம்மை விருப்பினால் சதுரம் என்னும்
இன்றமிழ்ப் பதிகப் பாடல் இசைத்திட இரண்டு பாலும்
நின்றஅக் கதவு காப்பு நிரம்பிட அடைத்த தன்றே.
அடைத்திடக்
கண்டு சண்பை ஆண்டகை யாரும் அஞ்சொல்
தொடைத்தமி ழாளி யாரும் தொழுதெழத் தொண்டர் ஆர்த்தார்;
புடைப்பொழிந் திழிந்த தெங்கும் பூமழை; புகலி வேந்தர்
நடைத்தமிழ்ப் பதிக மாலை நிரம்பிட நவின்று போற்றி.
அத்திரு
வாயில் தன்னில் அற்றைநாள் தொடங்கி நேரே
மெய்த்திரு மறைகள் போல மேதினி புக்குப் போற்ற
வைத்தெதிர் வழக்கஞ் செய்த வரம்பிலாப் பெருமையோரைக்
கைத்தலங் குவித்துத் தாழ்ந்து வாழ்ந்தது கடல்சூழ் வையம்.
-சேக்கிழார்.
|