1878.
|
துங்க
வானவர் சூழ்கடல் தாங்கடை போதில்
அங்கொர் நீழ லளித்தவெம் மானுறை கோயில்
வங்க மங்கொளி ரிப்பியு முத்து மணியுஞ்
சங்கும் வாரித் தடங்கட லுந்துசாய்க் காடே. 6 |
1879.
|
வேத
நாவினர் வெண்பளிங் கின்குழைக் காதர்
ஓத நஞ்சணி கண்ட ருகந்துறை கோயில்
மாதர் வண்டுதன் காதல்வண் டாடிய புன்னைத்
தாது கண்டு பொழின்மறைந் தூடுசாய்க் காடே. 7 |
உறையும் கோயில் என்க.
பாம்பின் உருவத்தைத் தலை முத லாக
நோக்கின், கடை குறைந்திருத்தல் ஆகிய கூழைமை புலப்படும்.
6.
பொ-ரை:
உயர்வுடைய தேவர்கள், உலகைச் சூழ்ந்துள்ள
கடலைத்தாங்கள் கடையும் பொழுது எழுந்த நஞ்சினை உண்டு அவர்கட்கு
அருள் நிழல் தந்த எம்தலைவன் உறையும் கோயில், பெரிதான கடல்,
மரக்கலங்களையும், அதன்கண் ஒளிர்கின்ற இப்பி, முத்து, மணி, சங்கு
ஆகியவற்றையும் வாரி வந்து சேர்க்கும் திருச்சாய்க்காடு ஆகும்.
கு-ரை:
துங்கம்-உயர்ச்சி. கடல் தாம் கடை(யும்) போதில் என்க.
பொழுது-போழ்து-போது என மருவிற்று. நீழல்-நஞ்சின் வெப்பம்
தணித்தற்கு அளித்த அருணிழல். வங்கம்-மரக்கலம். இப்பி-சிப்பி, கடல்
வங்கத்தையும் அங்கு ஒளிர்கின்ற இப்பியையும் முத்தினையும்
மணியினையும் சங்கினையும் வாரி உந்தும் என்க. அங்கு வங்கம் வாரி
உந்து மெனல் பொருந்தாது. ஒளிர்தல் முத்து முதலியவற்றிற்கும் உரியது.
சங்கங்களும் இலங்கிப்பியும் வலம்புரிகளும் இடறி, வங்கங்களும்
உயர்கூம்பொடு வணங்கும் மறைக்காடே (சுந்தரர்- 721)
7.
பொ-ரை: வேதங்களை அருளிய நாவினர். வெண்மையான
பளிங்கால் இயன்ற குழையணிந்த காதினர். கடலிடை எழுந்த நஞ்சினை
நிறுத்திய கண்டத்தை உடையவர். அத்தகைய சிவபிரானார் எழுந்தருளிய
கோயில், பெண் வண்டு தன்மீது காதல் உடைய ஆண்வண்டோடு புன்னை
மலர்த்தாதில் ஆடி மகிழ்ந்து பின் பொழிலிடை மறைந்து ஊடும்
சாய்க்காடாகும்.
கு-ரை:
சிவபிரான் வேதத்தை முதன் முதலாகச் சொல்லி
|