பக்கம் எண் :

524

1876.



வரங்கள் வண்புகழ் மன்னிய வெந்தை மருவார்
புரங்கள் மூன்றும் பொடிபட வெய்தவன் கோயில்
இரங்க லோசையு மீட்டிய சரக்கொடு மீண்டித்
தரங்க நீள்கழித் தண்கரை வைகுசாய்க் காடே.      4
1877.



ஏழை மார்கடை தோறு மிடுபலிக் கென்று
கூழை வாளர வாட்டும் பிரானுறை கோயில்
மாழை யொண்கண் வளைக்கை நுளைச்சியர் வண்பூந்
தாழை வெண்மடற் கொய்துகொண் டாடுசாய்க் காடே. 5


     4. பொ-ரை: வரங்கள் பலவும் தரும் வளமையான புகழ்
பொருந்திய எந்தையும். பகைவரின் முப்புரங்கள் பொடியாகுமாறு
கணைஎய்து அழித்தவனும் ஆகிய சிவபிரான் உறையும் கோயில், நெய்தல்
நிலத்துக்குரிய இரங்கல் ஓசையைக் கொண்டதும் வணிகர்கள் சேர்த்த
சரக்குகளைக் கொண்டுவந்து சேர்ப்பதும் ஆகிய கடலினது நீண்ட கழியின்
குளிர்ந்த கரையில் அமைந்த திருச்சாய்க்காடு ஆகும்.

     கு-ரை: வரங்களை அருளும் வண்மையால் எய்தும் புகழ்
அழியாமல் நிலைபெற்ற என் அப்பன். மருவார்-பகைவர். இரங்கல் ஓசை-
நெய்தற்றிணையுரிப்பொருளை நினைவூட்டுவது. சரக்கொடும் என்னும்
பாடமே சிறந்தது. ஈட்டிய- (பொருள் தேடிச்) சேர்த்த (சரக்கு). ஈண்டி-கூடி,
நெருங்கி. தரங்கம் - அலைகள். நீள்தண் கழிக்கரை என்க.

     5. பொ-ரை: மகளிர் வாழும் இல்லங்கள் தோறும் சென்று அவர்கள்
இடும் பலிக்காகக் கூழையான ஒளிபொருந்திய பாம்பை ஆடச்செய்து
மகிழ்விக்கும் பரமன் உறையும் கோயில், பொன் போன்ற ஒண்கண்ணையும்,
வளையணிந்த கையையும் உடைய நுளைச்சியர் வளமையான தாழை
மரத்தில் பூத்துள்ள மலரின் வெண்மடல்களைக் கொய்து மகிழும்
திருச்சாய்க்காடு ஆகும்.

     கு.ரை: ஏழைமார்-மகளிர். ‘ஏழைபங்காளனையே பாடேலோ
ரெம்பாவாய்’ என்னுந் திருவாசகத்திற்கு வறியர் பங்கை ஆள்பவன் என்று
பொருள் கூறுதல் மாபாதகம். கடை-கடைவாயில். கூழை-கடை குறைந்தது.
(தோற்றம்) மாழை-பொன். மேலும் இவ்வாறு நெய்தற்றிணைக் கருப்பொருள்
சில கூறல் அறிக. கண்ணையும் கையையும் உடைய நுளைச்சியர் கொய்து
கொண்டாடும் சாய்க்காடு எம்மான்