1898.
|
சாநாளின்
றிம்மனமே
சங்கைதனைத் தவிர்ப்பிக்குங்
கோனாளுந் திருவடிக்கே
கொழுமலர்தூ வெத்தனையுந்
தேனாளும் பொழிற்பிரம
புரத்துறையுந் தீவணனை
நாநாளு நன்னியமஞ்
செய்தவன்சீர் நவின்றேத்தே. 4 |
கண்ணே! அவன் நம்
மேல் பரிவு கொண்டு அருள்செய்ய அவனையே
பார்.
கு-ரை:
நல்ல நெஞ்சமே! நீ உய்தி வேண்டுவாயானால் உன்னை
இரந்தேன். இரந்தது என்ன என்றால், நம்பெருமான் திருவடிகளையே
சதாகாலமும் நினைவுசெய்திரு. அன்னம் ஆசிரியர் காலத்திலிருந்தமை
புலப்பட்டது. வாயதுவே-வாயே! எப்போதும் ஆரமுதைப் பன்.
அம்சீர்பன்-அழகிய கீர்த்தியைப் பன்னுக. கண்ணே! பரிந்திடப்பார்.
பரிந்திட-சிவபிரான் இரங்கி அருள்செய்ய. பார்-கேசாதிபாதம் +
பாதாதிகேசம் தரிசித்துக்குளிர்வாய்.
4.
பொ-ரை: மனமே! சாகும் நாள் இன்றி, இனிது வாழவும்
மனத்தில் எழும் ஐயங்களைப் போக்கவும் வல்லனாய தலைவனின்
திருவடிகளிலேயே நாள்தோறும் நல்ல மலர்களை எவ்வளவிலேனும்
தூவி வருவாயாக. நாவே, தேன் நிறைந்த பொழில் சூழ்ந்த
பிரமபுரத்துறையும் தீவண்ணனை நல்ல நியமத்துடன் இருந்து அவன்
புகழை நவின்று ஏத்துவாயாக.
கு-ரை:
சாம்நாள் இன்றி, இகரத்தைச்சுட்டாக்குதல் பொருந்தாது.
சங்கை-சாகும் நாள் உண்டோ இன்றோ என்னும் சந்தேகம். தவிர்ப்பிக்கும்-
தவிரப்போக்கும். கோன்-தலைவன் (சிவபிரான்) மேல் திருவடியே என்றும்
இங்கு, திருவடிக்கே என்றும் அருளியதை உணர்ந்து, மறந்து மற்றொன்றை
எண்ணாமைவேண்டும்.
தீவணன்-அழல்
வண்ணத்தவன். நா-நாவே! நல்ல நியமம் செய்து
அவன் சீரை நவின்று ஏத்து. நல்நியமம்-தோத்திரம் புரிதற்கு முன்
செய்யற்பாலன ஆகிய பூஜாங்கங்களைத் தவறாமல் செய்யும் நியமம்.
|