1896.
|
தாமென்றும்
மனந்தளராத்
தகுதியரா யுலகத்துக்
காமென்று சரண்புகுந்தார்
தமைக்காக்குங் கருணையினான்
ஓமென்று மறைபயில்வார்
பிரமபுரத் துறைகின்ற
காமன்றன் னுடலெரியக்
கனல்சேர்ந்த கண்ணானே. 2 |
1897.
|
நன்னெஞ்சே
யுனையிரந்தேன்
நம்பெருமான் றிருவடியே
உன்னஞ்செய் திருகண்டாய்
உய்வதனை வேண்டுதியேல்
அன்னஞ்சேர் பிரமபுரத்
தாரமுதை யெப்போதும்
பன்னஞ்சீர் வாயதுவே
பார்கண்ணே பரிந்திடவே. 3 |
2.
பொ-ரை: உலகில் வாழ்வோர்க்கு அடைக்கலம் தருபவன்
இவனேயாம் என்று எக்காலத்தும் மனம் தளராத தன்மையராய்த் தன்னைச்
சரண் அடைந்தவர்களைக் காக்கும் கருணையாளன்யாவன் எனில் ஓம்
எனக்கூறி நான் மறைகளைப் பயிலும் அந்தணர் வாழும் பிரமபுரத்தில்
விளங்குகின்ற காமனின் உடலை எரியச் செய்த கண்ணுதலோனே யாவான்.
கு-ரை:
உலகத்துக்கு அடைக்கலம் சருவேசுவரன் ஒருவனே
ஆவான் என்று, என்றும் மனம்தளராத தகுதியை உடையவராகி,
அச்சிவபிரானையே சரணம் அடைந்தவர்களைக் காக்கும் கிருபாகரன்.
ஓம் என்று - ஓம் என்று பிரணவமந்திரத்தை ஓதி. உறைகின்ற கண்ணான்;
எரியச் சேர்ந்த கண் என்க. மன்மத தகனம்.
3.
பொ-ரை: நல்ல நெஞ்சே! உன்னை இரந்து வேண்டுகின்றேன்.
நீ கடைத்தேற நினைவாயானால் நமது தலைவனாகிய சிவபிரான்
திருவடிகளையே எக்காலத்தும் சிந்தித்திரு. வாயே! அன்னங்கள் பயிலும்
பிரமபுரத்தில் விளங்கும் அரிய அமுது போல்வான் புகழைப் பேசு.
|