பக்கம் எண் :

535

40. திருப்பிரமபுரம்

பதிக வரலாறு:

     137 ஆவது பதிகத் தலைப்பைக் காண்க.

பண்: சீகாமரம்

ப.தொ.எண்: 176   பதிக. எண்: 40

திருச்சிற்றம்பலம்

1895.







எம்பிரா னெனக்கமுதம்
     ஆவானுந் தன்னடைந்தார்
தம்பிரா னாவானுந்
     தழலேந்து கையானுங்
கம்பமா கரியுரித்த
     காபாலி கறைக்கண்டன்
வம்புலாம் பொழிற்பிரம
     புரத்துறையும் வானவனே.           1


     1. பொ-ரை: எமக்குத் தலைவன், எனக்கு அமுதம் போல
இனிப்பவன், தன்னை அடைபவர்களுக்குத் தம்பிரான், தழல்ஏந்திய கையான்,
அசையும் இயல்புடைய பெரிய யானையை உரித்துப் போர்த்த கபாலி,
இத்தகையோன் மணம் உலாவும் பொழில் சூழ்ந்த பிரமபுரத்தில் உறையும்
வானவனே யாவான்.

      கு-ரை: எம்பிரான் ஆவானும், தன்னை அடைந்தவர் தம்பிரான்
ஆவானும், தழல் ஏந்திய கையானும், காபாலியும், கறைக்கண்டனும்
வானவனே என்று முடிக்க.

     தம் - ஆன்மாக்கட்கு. பிரான்-இனியன். பிரியமானவன் என்றும்
ஆன்மாக்கள் அநேகமாதலின் ‘தம்’ என்றும், ஆண்டவன் ஏகனாதலின்
தன் என்றும் குறித்தனர் முன்னோர். தன்னானந்தக் கொடி-‘சிவகாமவல்லி’
என்புழிக்காண்க.

     கம்பம்-அசைவு. கட்டுந்தூண். கரி-கரத்தையுடையது. யானை.
காபாலி-பிரம கபாலத்தை ஏந்தியவன். கறை-நஞ்சு. வம்பு-மணம்.