பக்கம் எண் :

534

நித்தன்னிம லனுமை யோடுங்கூட
     நெடுங்கால முறைவிட மென்று சொல்லாப்
புத்தர்புறங் கூறிய புன்சமணர்
     நெடும்பொய் களைவிட்டு நினைந்துய்மினே. 10
1894.







அம்மானை யருந்தவ மாகிநின்ற
     வமரர்பெரு மான்பதியான வுன்னிக்
கொய்ம்மாமலர்ச் சோலை குலாவுகொச்சைக்
     கிறைவன் சிவஞானசம் பந்தன் சொன்ன
இம்மாலையீ ரைந்து மிருநிலத்தி
     லிரவும்பக லுந்நினைந் தேத்திநின்று
விம்மாவெரு வாவிரும்பும் மடியார்
     விதியார் பிரியார் சிவன்சேவடிக்கே.    11

                     திருச்சிற்றம்பலம்


வீ்ற்றிருப்பன என்று எண்ணி வழிபடாப் பௌத்தர் சமணர்கூறும்
பொய்மொழி களை விட்டு அத்தலங்களை நினைந்துய்மின்.

      கு-ரை: அலம்பும் சலம்-அலையாய்ப் பெருகுங் கங்கைநீர்.
சொல்லா-புகழ்ந்து போற்றாத.

     11. பொ-ரை: தலைவனும் அரிய தவவடிவாக விளங்கும் தேவர்
முதல்வனும் ஆகிய சிவபெருமான் உறையும் திருத்தலங்களை நினைந்து
கொய்யத் தக்கனவான நறுமண மலர்களைக் கொண்டுள்ள சோலைகள்
செறிந்த கொச்சையம் பதிக்குத் தலைவனாகிய சிவஞான சம்பந்தன் பாடிய
இப்பதிகப்பாமாலையை நிலவுலகில் இரவும் பகலும் நினைந்து விம்மியும்
அஞ்சியும் விரும்பிப் போற்றும் அடியவர், நிறைந்த நல்லூழ்
உடையவராவர். மறுமையில் சிவன் சேவடிகளைப் பிரியாதவராவர்.

     கு-ரை: பதியான-தலமானவற்றை. விம்மா-விம்மி. வெருவா-வெருவி.
விதியார்-செல்வமுடையவர். சேவடிக்குப் பிரியார்.