பக்கம் எண் :

533

1891.




* * குலாவுதிங்கட்சடையான் குளிரும் பரிதிநியமம்
போற்றூரடி யார்வழி பாடொழியாத்தென்
     புறம்பயம் பூவணம் பூழியூரும்
காற்றூர்வரை யன்றெடுத் தான்முடிதோ
     ணெரித்தானுறை கோயிலென்றென் றுநீகருதே. 8
1892.







நெற்குன்றமோத் தூர்நிறை நீர்மருக
     னெடுவாயில் குறும்பலா நீடுதிரு
நற்குன்றம் வலம்புரந் நாகேச்சுர
     நளிர்சோலையுஞ் சேனைமா காளம்வாய்மூர்
கற்குன்றமொன் றேந்தி மழைதடுத்த
     கடல்வண்ணனு மாமல ரோனுங்காணாச்
சொற்கென்றுந் தொலைவிலா தாழனுறையுங்
     குடமூக்கென்று சொல்லிக் குலாவுமினே.      9
1893.



குத்தங்குடி வேதி குடிபுனல்சூழ்
     குருந்தங்குடி தேவன் குடிமருவும்
அத்தங்குடி தண்டிரு வண்குடியு
     மலம்புஞ்சலந் தன்சடை வைத்துகந்த


     8. பொ-ரை: திருப்பரிதிநியமம், திருப்புறம்பயம் முதலான
தலங்கள் கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் முடி, தோள்
ஆகியவற்றை நெரித்த சிவபிரான் உறையும் கோயில்கள் என நீ கருதுக.

     கு-ரை: என்று-என்றும் நீ கருது என்க. இதன் முழுப் பகுதியும்
கிடைத்திலது. ‘பருத்தி நியமத்துறைவாய்’ (சுந்தரர். ஊர்த்தொகை. 8.)
என்று வேறொன்றுமுண்டு. அதனை வைப்புத் தலத்தில் அடக்கினர்.

     9. பொ-ரை: நெற்குன்றம், ஓத்தூர் முதலியதலங்களை எண்ணி
மகிழ்வாயாக.

     கு-ரை: குறும்பலா-திருக்குற்றாலத் தலவிருட்சம். கற்குன்றம்-
கோவர்த்தனகிரி. காணாச்சொற்கு-காணாதபுகழ்க்கு. தொலைவு- அழிவு.

     10. பொ-ரை: குத்தங்குடி, வேதிகுடி முதலான குடிஎன முடியும்
தலங்கள் சிவபிரான் உமையம்மையாருடன் கூடி நெடுங்காலம்