பக்கம் எண் :

532

1889.







மனவஞ்சர்மற் றோடமுன் மாதராரு
     மதிகூர் திருக்கூடலி லாலவாயும்
இனவஞ்சொ லிலாவிடை மாமருது
     மிரும்பைப்பதி மாகாளம் வெற்றியூரும்
கனமஞ்சின மால்விடை யான்விரும்புங்
     கருகாவூர் நல்லூர் பெரும்புலியூர்
தனமென்சொலிற் றஞ்சமென் றேநினைமின்
     றவமாமல மாயின தானறுமே.          6
1890.






மாட்டூர்மடப் பாச்சி லாச்சிராம
     மயிண்டீச்சரம் வாதவூர் வாரணாசி
காட்டூர்கடம் பூர்படம் பக்கங்கொட்டுங்
     கடலொற்றியூர் மற்றுறை யூரவையும்
கோட்டூர்திரு வாமாத்தூர் கோழம்பமுங்
     கொடுங்கோ வலூர்திருக் குணவாயில்
* * * * * * * *                        7


     6. பொ-ரை:வஞ்சமனத்தவர் போயகல மதிகூர் மாதர்கள் வாழும்
ஆலவாய் இடைமருது முதலான தலங்கள் நமக்குப் புகலி டமாவன
எனநினைமின். அதுவே தவமாகும். மும்மலங்களும் அற்று ஒழியும்.

     கு-ரை:மனவஞ்சர்-வஞ்சமனத்தர். மற்றோட என்பது இங்குப்
பொருந்துமாறு புலப்பட்டிலது. திருக்கூடலில் ஆலவாய்-திருக்கூடலில்
உள்ள ஆலவாயென்னும் திருக்கோயில். இனவஞ்சொல் இலா-வன்சொல்
இனம் இல்லாத. கனம் அம்சினம் மால்விடை-மேன்மையும் அழகும்
கோபமும் உடைய திருமாலாகிய விடை. தஞ்சம்-அடைக்கலம்.
(தண்+து+அம்). தவமாம்-தவமாகும். மலம் ஆயினதான் அறுமே-
மும்மலமும் தானே அற்றொழியும்.

     7. பொ-ரை:மாட்டூர் பாச்சில் ஆச்சிராமம் முதலியன இறைவன்
உறையும் சிறந்த தலங்கள்.

     கு-ரை:மற்று உறையூர். இப்பாவின் முழுப்பகுதி கிடைத்திலது.