பக்கம் எண் :

539

1901.







சிலையதுவெஞ் சிலையாகத்
     திரிபுரமூன் றெரிசெய்த
இலைநுனைவேற் றடக்கையன்
     ஏந்திழையா ளொருகூறன்
அலைபுனல்சூழ் பிரமபுரத்
     தருமணியை யடிபணிந்தால்
நிலையுடைய பெருஞ்செல்வம்
      நீடுலகிற் பெறலாமே.                7



மேனியனாய் விளங்கும் சங்கரன்தன் தன்மைகள், தன் அடியவர்
அவ்விடத்து எப்பிறப்பை எய்தினாலும் எம்பெருமானாகிய அவ்விறைவன்
எருதேறிச்சென்று அவற்றுக்கு ஏற்ற வகையில் அங்கங்கே தோன்றி இங்கே
என அருள் புரியும் செயல்களாகும்.

     கு-ரை: எங்கு யாது பிறந்திடினும் என்பதும், எங்கேனும் யாதாகிப்
பிறந்திடினும் என்பதும் பொருள் வேறுபாடுடையன. இடமும் பிறப்பும்
வேறுபட்டாலும் அடியார்க்கு ஆண்டவனருள் கிடைப்பது திண்ணம்.
‘எங்கேனும் இருந்து, எங்கே போவேனாயிடினும், எங்கேனும் போகினும்’
என்னுந் தொடக்கத்துத் திருப்பாட்டுக்களை (திருமுறை 7) அறிக.
‘இங்கே’என்றது பிறந்த இடத்தையும் அப்பிறவியையும் குறித்து நின்றது.
கொங்கு-மணம். ஏயும்-பொருந்தும். பவளம்போலும் மேனியிற்பால்
வெண்ணீறு சண்ணித்த திருமேனிக்குச் சங்கு ஒப்பு. எம்பெருமான்
சங்கரன்றன் தன்மைகள் இங்கே என்று அருள்புரியும் என்றியைக்க.

     7. பொ-ரை: மேருமலையைக் கொடிய வில்லாகக் கொண்டு
திரிபுரங்களை எரித்து அழித்தவனும், மூவிலை வடிவாகக் கூரிய
முனையோடு அமைந்த வேல் ஏந்திய நீண்ட கையினனும், உமையொரு
பாகனும் ஆகிய கடல் சூழ்ந்திலங்கும் பிரமபுரத்துள் அரிய மணி போல்
வானாய் விளங்கும் சிவபிரான் திருவடிகளை வணங்கினால்
வானோர்க்குயர்ந்த உலகில் வீடுபேறாகிய பெருஞ்செல்வம் எய்தலாம்.

     கு-ரை: சிலை அது-மேருமலையானது. (அது; பகுதிப் பொருள்
விகுதி) சிலை-வில் (பதிகம் 173; பா7. குறிப்புணர்க) ‘திரி தருபுரம்-
வினைத்தொகை. ‘திரிதருபுரம் எரிசெய்த சேவகன்’ (தி. 3 ப. 23. பா.9.)’
திரியும் மூவெயில்’ (தி.4ப.20 பா.7. தி.5 ப.25. பா.4) ‘திரியும் மும் மதில்’
(தி.5 பதி.36 பா.10) ‘திரியும் முப்புரம்’ (சுந்தரர்