1902.
|
எரித்தமயிர்
வாளரக்கன்
வெற்பெடுக்கத் தோளொடுதாள்
நெரித்தருளுஞ் சிவமூர்த்தி
நீறணிந்த மேனியினான்
உரித்தவரித் தோலுடையான்
உறைபிரம புரந்தன்னைத்
தரித்தமன மெப்போதும்
பெறுவார்தாந் தக்காரே.
8 |
1903.
|
கரியானும்
நான்முகனுங்
காணாமைக்
கனலுருவாய்
அரியானாம் பரமேட்டி
அரவஞ்சே
ரகலத்தான் |
பா. 626, 685, 809)
இலை-உவமை. நிலையுடைய பெருஞ் செல்வம்-
சிவாநந்தாநுபவம். நீடுலகு-வானோர்க்குயர்ந்த உலகம்.
8.
பொ-ரை: எரிபோலும் தலைமயிரை உடைய, வாள் ஏந்திய
அரக்கனாகிய இராவணன் கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க, அவன்
தோளையும் தாளையும் நெரித்தருளிய சிவமூர்த்தியும், நீறணிந்த
மேனியனும், யானையை உரித்து அதன் தோலைப் போர்வையாகக்
கொண்டவனும் ஆகிய சிவபிரானது பிரமபுரத்தை எண்ணுவார் எப்போதும்
தக்கார் என்னும் பெயரைப் பெறுவர்.
கு-ரை:
சிவமூர்த்தி-சிவமாகிய மூர்த்தி. தக்கார்-
பெருந்தகையுடையார். மாணடிசேர்தல் தக்காரிலக்கணம் எனப்பட்டது.
கற்றதனாலாய பயன் அதுவே. பார்க்க: பா. 10. தோளொடு தாள்
என்புழித்தோளொடு தாளையும் தாளொடு தோளையும் சேர்த்து நெரித்து
என்று கொள்ளலாகாது. தோளையும் தாளையும் நெரித்து எனல் வேண்டும்.
சிவமூர்த்தி என்பதில், மூர்த்தியும் மூர்த்திமானும் ஆக வெவ்வேறாக
கொள்ளாமல் அபேதபுத்தியொடு தியானம் பண்ணுக.
9.
பொ-ரை: திருமால் பிரமர் காணாதவாறு எரிஉருவாய் நீண்டு
அவர்க்கு அரியன் ஆனவனும், மேலான நிலையினனும், பாம்பணிந்த
மார்பினனும், காணுதற்குத் தெரியாதவனும் ஆகிய பெருமான்
எழுந்தருளியுள்ள பிரமபுரத்தைச் சேர்ந்தார் ஏழு உலகங்களையும்
அரசாளுதற்கு உரிமை உடையோராவர்.
|