பக்கம் எண் :

541

றெரியாதா னிருந்துறையுந்
     திகழ்பிரம புரஞ்சேர
உரியார்தா மேழுலகும்
     உடனாள வுரியாரே.                9
1904.







உடையிலார் சீவரத்தார்
     தன்பெருமை யுணர்வரியான்
முடையிலார் வெண்டலைக்கை
     மூர்த்தியாந் திருவுருவன்
பெடையிலார் வண்டாடும்
     பொழிற்பிரம புரத்துறையுஞ்
சடையிலார் வெண்பிறையான்
     தாள்பணிவார் தக்காரே.           10


     கு-ரை:பரமேட்டி-தன்னின்மேலதில்லாத உயரிய நிலையினன்.
அரவம்-பாம்பு. அகலம்-மார்பு. தெரியாதவன்-சிந்தையும் மொழியுஞ்
சென்று தெரிதற்கு அரியவன். ‘போய்க்காடே மறைந்துறைதல் புரிந்தானும்’
(ப. 177 பா.2) ஆம்.

     பிரமபுரத்தை இடைவிடாது சேர்ந்து தியானம் புரியும்
உரிமையடைவார்க்கு ஏழுலகாட்சியுரிமை உண்டு. உலகாட்சி
ஆண்டவனை வழிபட்டால்தான் எய்தும்.

     10. பொ-ரை:உடையற்றவர்களும் சீவரம் அணிந்தவர்களுமாய
சமணர் புத்தர்களால் தன்பெருமைகள் உணர இயலாதவனும், நாற்றம்
பொருந்திய வெண்ணிறத் தலையோட்டைக் கையில் ஏந்திய மூர்த்தி
எனப்பெறும் திருவுருவினனும், சடையில் பிறையணிந்தவனும் ஆகிய
பெண் வண்டுகளோடு ஆண் வண்டுகள் கூடி விளையாடும் பொழில்சூழ்ந்த
பிரமபுரத்துப் பெருமானின் திருவடிகளைப் பணிவோர் தக்கோர் எனப்
பெயர் பெறுவர்.

     கு-ரை:உடையிலார்-திகம்பரர். சீவரத்தார்-புத்தர். முடையில்-
சுடுநாற்றத்தில். ஆர்-பொருந்திய. மூர்த்தியாந் திருவுருவு-ஞானமூர்த்தி
மந்திரமூர்த்தி, அத்துவாமூர்த்தி முதலியன. உருவன்-மூர்த்திமான், உருவை
உடையவன் தக்காரிலக்கணம். பார்க்க; பா. 8