பக்கம் எண் :

565

1937.







கடுத்துவருங் கங்கைதனைக்
     கமழ்சடையொன் றாடாமே
தடுத்தவரெம் பெருமானார்
     தாமினிதா யுறையுமிடம்
விடைத்துவரு மிலங்கைக்கோன்
     மலங்கச்சென் றிராமற்காப்
புடைத்தவனைப் பொருதழித்தான்
     புள்ளிருக்கு வேளூரே.               10


அறக்கருணையைக் காட்டுங் கண்ணை ஆள்பவன் எனலும் பொருந்தும்-
ஆதித்தன்-சூரியன். இதிற் குறித்த வரலாறு:-சூரியனுக்குச் சம்பாதி சடாயு
இருவரும் மக்கள் என்றும், ஞாயிற்று மண்டலம் வரை பறந்து சென்று
சிறகுகள் கரிந்து தலத்தில் வீழ்ந்து வழிபட்டுச் சிறகும் வரமும்
பெற்றனரென்றும் புராணம் உள்ளது. இச்செய்தி இராமாயணத்தில் முறையே
ஆரண்ய காண்டத்திலும், கிஷ்கிந்தா காண்டத்திலும் கூறப்பெற்றுள்ளன.
அகல்-அகலிய, பரந்த ஞாலத்தவர்-உலகத்தவர்.

     10. பொ-ரை: சினந்துவந்த கங்கையைத்தனது மணம்கமழும் சடை
ஒன்றில் அதுவும் முற்றிலும் நனையாதவாறு தடுத்துத் தாங்கியவராகிய எம்
தலைவரும், சீறிவந்த இராவணன் மயங்குமாறு சென்று இராமனுக்காக
அவனைப்புடைத்து அவனோடு போரிட்டுத்தடுத்த சடாயுவால்
வழிபடப்பெற்றவரும் ஆகிய சிவபெருமான் உறையுமிடம் புள்ளிருக்குவேளூர்.

     கு-ரை: கடுத்து-கோபித்து. சடைமேல் கங்கையைத் தடுத்தவர்.
ஒன்று-சிறிதும். ஆடாமே-முழுகாமல். விடைத்து-சீறி, வேறுபடுத்து.
மலங்க-அலைய. இராமற்கு-இராமபிரானுக்கு, புடைத்து-அடித்து. அலைத்து,
அவனை-அவ்விராவணனை. பொருது-அழித்து. அழித்தான்: சடாயு.
அழிக்கப்பட்டது வலி (கம்பர். சடாயுவுயிர்நீத்த 118). அவனைப் புடைத்து
அழித்தான் என்று கூட்டுக.

“எறிந்தான் அதுநோக்கி இராவணன் நெஞ்சின் ஆற்றல்
 அறிந்தான் முனிந்து ஆண்டதோர் ஆடகத்தண்டு வாங்கிப்
 பொறிந்தாங் கெரியின் சிகை பொங்கியெழப் புடைத்தான்
 மறிந்தான் எருவைக்கின்றை மால்வரை போல மண்மேல்”