பக்கம் எண் :

564

எண்ணின்றி முக்கோடி
     வாணாள துடையானைப்
புண்ணொன்றப் பொருதழித்தான்
     புள்ளிருக்கு வேளூரே.            8
1936.







வேதித்தார் புரமூன்றும்
     வெங்கணையால் வெந்தவியச்
சாதித்த வில்லாளி
     கண்ணாளன் சாருமிடம்
ஆதித்தன் மகனென்ன
     வகன்ஞாலத் தவரோடும்
போதித்த சடாயென்பான்
     புள்ளிருக்கு வேளூரே.            9


இன்பங்களையும் அருளும் நீலமணி மிடற்றோனும், கணக்கில் அடங்காத
மூன்று கோடி ஆண்டுகளை வாழ் நாளாகப் பெற்ற இராவணனொடு
போரிட்டுப் புண்படும்படி செய்து அவன் வலிமையை அழித்த சடாயுவால்
பூசிக்கப்பட்டவனுமாகிய சிவபிரான் மருவும் இடம் புள்ளிருக்கு வேளூர்.

     கு-ரை: ஒன்ற-பொருந்த. ‘பண்பொருந்த இசைபாடும் பழனம் சேர்
அப்பன்’ (தி.4. ப.12. பா.5) குடியாகக் கொடுக்கும் மணி கண்டன் என்க.
மண் இன்றி என்றது, பிறவாமைக்கும், விண் கொடுக்கும் என்றது, வீடு
பேற்றிற்கும் எனக் கொள்க. எண்-கணக்கு. வாணாள்-வாழ்நாள் என்பதன்
மருஉ. அழித்தான்-சடாயு.

     9. பொ-ரை: தன்னோடு பேதம் உற்ற அசுரர்களின்
முப்புரங்களும் கொடிய கணையால் வெந்தவியுமாறு செய்த வில்லாளியும்,
கருணைக்கண்ணாளனும், ஆதித்தன் மகனாய் அகன்ற இந்நிலவுலக
மக்களோடு பறவைவடிவாய்த் தோன்றி அறநெறி போதித்து வந்த
சடாயுவால் வழிபடப்பட்டவனுமாகிய சிவபெருமான் சாரும் இடம்
புள்ளிருக்குவேளூர்.

     கு-ரை: வேதித்தார்-பேதித்தவர், பகைவர். சாதித்த-கொன்ற.
வில்லாளி-(மேரு) வில்லை ஆள்பவன். கண் ஆளன்-ஞானக்
கண்ணாயிருந்து எல்லாவுயிர்களையும் ஆள்பவன், அடையாதார்க்குச்
செய்யும் மறக்கருணையின் வேறாய், அடைந்தார்க்கு நல்கும்