1934.
|
அத்தியினீ
ருரிமூடி
யழகாக வனலேந்திப்
பித்தரைப்போற் பலிதிரியும்
பெருமானார் பேணுமிடம்
பத்தியினால் வழிபட்டுப்
பலகாலந் தவஞ்செய்து
புத்தியொன்ற வைத்துகந்தான்
புள்ளிருக்கு வேளூரே. 7 |
1935.
|
பண்ணொன்ற
இசைபாடு
மடியார்கள் குடியாக
மண்ணின்றி விண்கொடுக்கும்
மணிகண்டன் மருவுமிடம் |
கு-ரை:
திறம் - சைவத்திறம். அறம்-அன்று ஆலின்கீழ் இருந்து
உரைத்த அறம். சிவதன்மம்-சரியையும், கிரியையும் சிவதன்மம் என்பது
சைவ சம்பிரதாயம் ஆயினும், இங்கு நான்கிற்கும் பொதுவாய் நின்றது. (இது
தலவரலாற்றுக் குறிப்பு) மறம்-வீரம். தன்வலி-தனது பலத்தை. வந்தானை-
வந்த (இரா) வ (ண) னை. புறம் கண்ட-முதுகுபார்த்த, வென்ற என்றபடி.
7.
பொ-ரை: யானையை உரித்த தோலால் உடலை மூடிக்கொண்டு
அழகாகக் கையில் அனலை ஏந்தி, பித்தர் போலப் பலியேற்றுத் திரியும்
பெருமானும், பத்தியோடு வழிபட்டுப் பலகாலம் தவஞ்செய்து தன் அறிவை
இறை உணர்வொடு பொருந்தவைத்து மகிழ்ந்த சடாயுவால்
வழிபடப்பட்டவனும் ஆகிய சிவபிரான் விரும்பும் இடம் புள்ளிருக்குவேளூர்.
கு-ரை:
அத்தி-யானை. மூடி-போர்த்து. பித்தரைப் போல் என்றதால்,
இறைவனைப் பித்தனெனல் ஏலாது. பத்தி-பக்தி. திருவடிக்கு அன்பு. புத்தி-
ஞானம். ஒன்ற-சிவத்தொடு பொருந்த, ஒன்றி இருந்து நினைமின்கள்.
உகந்தான்-விரும்பினான், உயர்ந்தவன். (சம்பாதி).
8.
பொ-ரை: பண்பொருந்த இசைபாடும் அடியவர்கள் குடியாக
இருந்து வழிபட உலகியல் இன்பங்களை மட்டுமல்லாமல் விண்ணுலக
|