பக்கம் எண் :

604

வண்ட லம்பிய கொன்றை யானடி
   வாழ்த்தி யேத்திய மாந்தர் தம்வினை
விண்ட லங்கெளிதாம்
   அதுநல் விதியாமே.                 2
1995.







நாடெ லாமொளி யெய்த நல்லவர்
   நன்று மேத்தி வணங்கு வார்பொழிற்
காடெ லாமலர்
   தேன்துளிக்குங் கடற்காழித்
தோடு லாவிய காது ளாய்சுரி
   சங்க வெண்குழை யானென் றென்றுன்னும்
வேடங் கொண்டவர்கள்
   வினை நீங்கலுற்றாரே.               3


சூழ்ந்த வயல்களைச் சென்றடையும் பெருமைமிக்க காழிப்பகுதியில்
வண்டுகள் ஒலிக்கும் கொன்றை மாலை சூடிய சிவபிரானின் திருவடிகளை
வாழ்த்தித் துதிக்கும் மக்களின் வினைகள் நீங்குதல் எளிதாம். அதுவே
நல்லூழையும் தருவதாகும்.

     கு-ரை: திரை - அலை. வங்கம் - மரக்கலம். கண்டல் - தாழை.
புடை - பக்கம்.

     அலம்பிய - ஒலித்த. விண்டல் - நீங்குதல். விதி -பாக்கியம்.

     3. பொ-ரை: நாடுமுழுவதும் சிறக்க வேண்டுமென்று நல்லவர்கள்
நன்முறையில் ஏத்தி வணங்குவதும், நீண்ட சோலைகளில் எல்லாம் மலர்கள்
தேன் துளித்து விளங்குவதுமான கடற்காழியுள் தோடணிந்த காதினர்,
வளைந்த சங்கவெண்குழைக் காதினர் என்று பலகாலும் சொல்லி நினையும்
சிவவேடம் தரித்தவர்கள் வினை நீங்கப் பெறுவர்.

     கு-ரை: ஒளி-புகழ், விளக்கமுமாம், பொழிற்காடு-சோலைக் காடு.
தேனை மலர் துளிக்கும் காடு.

     அக்காட்டையுடைய கடற்காழி. சங்கக்குழை-சங்கினாலாகிய குண்டலம்.
வேடம்-சிவவேடம்.