பதிக
வரலாறு:
137ஆவது பதிகத்தில்
காண்க.
பண்:
சீகாமரம்
ப.,தொ.எண்: 185
பதிக எண்: 49
திருச்சிற்றம்பலம்
1993.
|
பண்ணி
னேர்மொழி மங்கை மார்பலர்
பாடி யாடிய வோசை நாடொறுங்
கண்ணி னேரயலே
பொலியுங் கடற்காழிப்
பெண்ணி னேரொரு பங்கு டைப்பெரு
மானை யெம்பெரு மானென் றென்றுன்னும்
அண்ண லாரடியார்
அருளாலுங் குறைவிலரே. 1
|
1994.
|
மொண்ட
லம்பிய வார்தி ரைக்கடல்
மோதி மீதெறி சங்க வங்கமுங்
கண்டலம் புடைசூழ்
வயல்சேர் கலிக்காழி |
1. பொ-ரை:
பண்ணிசை போலும் மொழிபேசும் மங்கையர் பலர்
பாடி ஆடிய ஓசை கண்ணெதிரே அமைந்து விளங்கும் கடலை
அடுத்துள்ள காழிப்பதியில் பெண்பாகனாக விளங்கும் பெருமானையே
எம்தலைவன் என்று பலகாலும் கூறும் சிவனடியார்கள் பொருளோடு
அருளாலும் குறைவிலர்.
கு-ரை:
பண்ணின்-பண்ணிசையின்பத்தை. நேர்-ஒத்த. கண்ணின்
நேர்-கண்ணெதிரில். பெண். . . . . .பங்கு-மாதியலும்பாதி, உன்னும்-தியானம்
புரியும். அருளாலும் என்ற உம்மை இம்மைக் குரிய பொருளாலும் அன்றி
என்று இறந்தது தழீஇயிற்று.
2. பொ-ரை:
நீரை முகந்து ஒலித்து வரும் நீண்ட திரைகள்
மரக்கலங்களை மோதிக் கடலிலிருந்து எறியும் சங்குகள் தாழைமரங்கள்
|