1992.
|
தண்பொழில்சூழ்
சண்பையர்கோன்
றமிழ்ஞான சம்பந்தன்
விண்பொலிவெண் பிறைச்சென்னி
விகிர்தனுறைவெண்காட்டைப்
பண்பொலிசெந் தமிழ்மாலை
பாடியபத் திவைவல்லார்
மண்பொலிய வாழ்ந்தவர்போய்
வான் பொலியப் புகுவாரே. 11 |
திருச்சிற்றம்பலம்
பல்லாண்டு) எனல் போல
அவர் சென்மின் எனலுமாம். ஓதினவர்
ஒருதீதும் இலர் என்று உணருமின் என்க.
11. பொ-ரை:
குளிர்ந்த பொழிலால் சூழப்பட்ட சண்பை நகர்த்
தலைவனாகிய தமிழ்ஞானசம்பந்தன், விண்ணிற் பொலியும் பிறை மதி
சேர்ந்த சென்னியினை உடைய விகிர்தன் உறையும் திருவெண்காட்டைப்
பண்ணிசை பொலியப்பாடிய இச்செந்தமிழ் மாலைபத்தையும் வல்லவர்,
மண்பொலிய வழ்வதோடு வான்பொலியவும் சென்று வாழ்வர்.
கு.ரை:
விண்பொலி வெண்பிறை-ஆகாயத்தில் விளங்குகின்ற
வெள்ளைப் பிறை. பண்பொலி செந்தமிழ்மாலை மண் பொலிய வாழ்ந்தவர்
விண் பொலியப் புகுவர் என்க. வாழ்ந்தவர் எழுவாய், புகுவார்-பயனிலை.
திருஞானசம்பந்தர்
புராணம்
மெய்ப்பொரு
ளாயி னாரை வெண்காடு மேவி னாரைச்
செப்பரும் பதிக மாலை கண்காட்டு நுதல் முன் சேர்த்தி
முப்புரஞ் செற்றார் பாதஞ் சேரு முக் குளமும் பாடி
ஒப்பரு ஞானம் உண்டார் உளமகிழ்ந் தேத்தி வாழ்ந்தார்.
-சேக்கிழார்.
|
|