பக்கம் எண் :

601

1991.







போதியர்கள் பிண்டியர்கள்
     மிண்டுமொழி பொருளென்னும்
பேதையர்க ளவர்பிறிமின்
     அறிவுடையீ ரிதுகேண்மின்
வேதியர்கள் விரும்பியசீர்
     வியன்றிருவெண் காட்டானென்
றோதியவர் யாதுமொரு
     தீதிலரென் றுணருமினே.        10


செய்து வழிபடும் நிலையில் சிறந்த திருவெண்காட்டில் எழுந்தருளியுள்ளான்
என்று மனங்கசிந்து உருகாதவரின் ஞானத்தை மதியோம்.

     கு-ரை: கள்-தேன். கமலத்தான்-தாமரை மேலுள்ள பிரமன்.
கடல்-பாற்கடலில். கிடந்தான்-அறிதுயில் செய்யும் திருமால். ‘தேசங்கள்
தொழநின்ற திருமால்’ (தி.4 ப.7 பா.6). ஆண்மை-ஆளாந்தன்மை, அடிமைத்
திறம். கொளற்கு-கொள்ளவேண்டி. உயர்ந்து-மேல் பறந்தும் ஆழ்ந்தும்,
கீழ்தோண்டிச் சென்றும். உணர்வு அரியான்-உணர்வதற்கு அரியவன்.
‘வெள்ளானை. . . . வெண்காடு’ (பா.7) வெள்ளானைக்காடு என்பது
வெண்காடு என்று சுருங்கிற்று எனக்கருத இடமுண்டு. உள் ஆடி-உள்ளம்
கசிந்து, உள்ளம் நடுங்கி. உருகாதவரது ஞானப் பேற்றை. உணரோம் -
மதியோம். உருக்கம் சிவஞானத்தை எய்துவிக்கும். உருகாமை தற்போதத்தை
ஒழிக்காது.

     10. பொ-ரை: போதிமரத்தின் அடியில் தவம் செய்யும் புத்தர்கள்,
அசோக மரநிழலில் தவம் செய்யும் சமணர்கள் கூறும் வன்புரை
களைப்பொருளாகக் கருதும் பேதையர்களைப் பிரிவீர்களாக.
அறிவுடையவரே! இதனைக் கேளுங்கள். வேதியர்கள் விரும்பும் புகழுடைய
பெரிய திருவெண்காட்டில் உறையும் ஈசன் பெயர்களை ஓதியவர் ஒரு
தீங்கும் இலராவர் என்று உணருமின்.

     கு-ரை: போதியர்கள்-சாக்கியர்கள். போதி-அரசமரம். புத்தன்
போதி விருட்சத்தின் கீழினன்; போதி வேந்தன், பிண்டியர்கள்-சமணர்கள்.
பிண்டி-அசோகமரம் ‘பூமலி அசோகின் புனை நிழலமர்ந்த நான்முகன்’
மிண்டு மொழி-வன்புரை. பேதையர்களாகிய அவரைப் பிரிந்து சென்மின்.
அறிவுடையீர் இதைக் கேண்மின். ‘மிண்டு மனத்தவர் போமின்கள்
மெய்யடியார்கள் விரைந்து வம்மின்’ (திருப்