பக்கம் எண் :

600

1889.







பண்மொய்த்த வின்மொழியாள்
     பயமெய்த மலையெடுத்த
உன்மத்த னுரநெரித்தன் றருள்செய்தா
     னுறைகோயில்
கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக்
     கடன் முழங்க
விண்மொய்த்த பொழில்வரிவண்
     டிசைமுரலும் வெண்காடே.       8
1990.







கள்ளார்செங் கமலத்தான்
     கடற்கிடந்தா னெனவிவர்கள்
ஒள்ளாண்மை கொளற்கோடி
     யுயர்ந்தாழ்ந்து முணர்வரியான்
வெள்ளானை தவஞ்செய்யு
     மேதகுவெண் காட்டானென்
றுள்ளாடி யுருகாதா
     ருணர்வுடைமை யுணரோமே.     9


     8. பொ-ரை: பண்ணிசை போலும் இனிய மொழியினளாகிய
பார்வதிதேவி அஞ்சுமாறு கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த பித்தனாகிய
இராவணனின் மார்பை நெரித்துப்பின் அருள் செய்த சிவபிரான் உறையும்
கோயில், கண்கள் பொருந்திய தோகையைக் கொண்ட நீலமயில்கள்
நடனமாடவும், கடல் முழங்கவும், வானளாவிய பொழிலில் வரிவண்டுகள்
இசைபாடவும் விளங்கும் திருவெண்காடாகும்.

     கு-ரை: மொழியாள்-சொல்லியள் (தேவியார்). பயம்-அச்சம்.
உன்மத்தன்-பித்துக்கொளி. உரம்-மார்பு. கண்-தோகைக் கண்கள்.
கருமஞ்ஞை-நீல மயில். மயில் ஆட்டத்திற்கு முடிவு, கடல்,
இசைவண்டினொலி, ‘விண்மொய்த்த பொழில்’ என்ற தலத்தின்
சோலைவளம் இன்றும் உளது.

     9. பொ-ரை: தேன் பொருந்திய செந்தாமரையில் எழுந்தருளிய
நான்முகன் கடலிடைத் துயிலும் திருமால் ஆகியோர் தன்முனைப்பு நீங்கிச்
சிறந்த அடியவர் ஆதற் பொருட்டு மிக உயர்ந்தும் ஆழ்ந்தும் அவர்கள்
உணர்தற்கு அரியவனாகிய சிவபிரான் வெள்ளானை தவஞ்