1988.
|
சக்கரமாற்
கீந்தானுஞ்
சலந்தரனைப் பிளந்தானும்
அக்கரைமே லசைத்தானும்
அடைந்தயிரா வதம்பணிய
மிக்கதனுக் கருள்சுரக்கும்
வெண்காடும் வினைதுரக்கும்
முக்குளநன் குடையானு
முக்கணுடை யிறையவனே. 7 |
இறைவன் திருப் பெயர்களை
ஓதிக் கொண்டு வெண்முகில் சேரும்
உயரிய கரியபனை மீது வீற்றிருக்கும் வெண்காடாகும்.
கு-ரை: தண்மை; வெம்மை இரண்டும் முறையே
மதியின் நிலவும்
பாம்பின் நஞ்சும் குறித்தன. ஒள்மதியம் நுதல் உமை-ஒளி பொருந்திய
பிறை போன்ற நெற்றியையுடைய உமாதேவியார். கூறு-இடப்பால்.பெணை-
பெண்ணை, பனை, கிள்ளை நாமம் ஓதவீற்றிருக்கும் காடு என்க.
பாரிசையும்
பண்டிதர்கள் பல்நாளும் பயின்றோதும் ஓசை கேட்டு
வேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள் பாருட் சொல்லும் மிழலையாமே
(தி.1 ப.132 பா.1) வேதத்தொலியாற் கிளி சொற்பயிலும் வெண்காடே
(ப.197 பா.2).
7. பொ-ரை: திருமாலுக்குச்
சக்கராயுதம் அளித்தவனும்,
சலந்தராசுரனைப் பிளந்து அழித்தவனும், இடையில் எலும்புமாலை
அணிந்துள்ளவனும், தன்னை அடைந்து ஐராவதம் பணிய அதற்கு
மிகுதியான அருளைச் சுரப்பவனும், வினைகளைப் போக்கும்
முக்குளங்களை உடையவனும் திருவெண்காட்டில் எழுந்தருளிய
முக்கண்ணனாகிய இறையவனே ஆவான்.
கு-ரை: மாற்கு-விஷ்ணுவுக்கு,
அக்கு-எலும்புமாலை. அயிராவதம்-
வெள்ளானை (பா.9). அதனுக்கு-அவ்வெள்ளானைக்கு அருள்மிக்குச்சுரக்கும்
என்க. காடும் குளமும் உடையான் என்றும், காடும் முக்குளம் உடையானும்
இறைவன்; பிளந்தானும் அசைத்தானும் உடையானும் இறைவனே என்றும்
கொள்ளலாம். வெளிய உருவத்து ஆனை வணங்கும் வெண்காடே (பா.19,6).
|