1986.
|
வேலைமலி
தண்கானல்
வெண்காட்டான் றிருவடிக்கீழ்
மாலைமலி வண்சாந்தால்
வழிபடுநன் மறையவன்றன்
மேலடர்வெங் காலனுயிர்
விண்டபினை நமன் றூதர்
ஆலமிடற் றானடியா
ரென்றடர வஞ்சுவரே. 5 |
1987.
|
தண்மதியும்
வெய்யரவுந்
தாங்கினான் சடையினுடன்
ஒண்மதிய நுதலுமையோர்
கூறுகந்தா னுறைகோயில்
பண்மொழியால் அவன்நாமம்
பலவோதப் பசுங்கிள்ளை
வெண்முகில்சேர் கரும்பெணைமேல்
வீற்றிருக்கும் வெண்காடே. 6 |
5.
பொ-ரை: கடல்நீர் நிரம்பிய குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த
வெண்காட்டு இறைவன் திருவடிகளை மாலைகளாலும் நிறைந்த
வளமையான சந்தனத்தாலும் வழிபட்ட மறையவராகிய சுவேதகேதுவின்
உயிரைக் கவரவந்த இயமனை அச்சிவன் உதைத்து அழித்ததால் அந்த
இயமனுடைய தூதர்கள் சிவபிரான் அடியவர் என்றால் அஞ்சி விலகுவர்.
கு-ரை:
வேலை-கடல். கானல்-கடற்கரைச்சோலை. காலன்
மாய்ந்ததால், தூதர் சிவனடியாரிடத்தில் அச்சமுற்றனர். இதிற்குறித்தது
திருவெண்காட்டுத் தலத்தில் நிகழ்ந்த சுவேத கேது முனிவர் வரலாறு,
(தி.2ப.61பா.7) இதனை மார்க்கண்டேய முனிவர் வரலாறு என்றும்
கூறுகின்றனர்.
6.
பொ-ரை: தனது சடைமுடியோடு தண்மதியையும் வெய்ய
அரவையும் தாங்கியவனும் ஒளி பொருந்திய மதி போன்ற நுதலை உடைய
உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவனும் ஆகிய சிவபிரான்,
உறையும் கோயில், பசிய கிளிகள் இனிய குரலால்
|