பக்கம் எண் :

597

பெண்ணினொடாண் பெருமையொடு
     சிறுமையுமாம் பேராளன்
விண்ணவர்கோன் வழிபடவெண்
     காடிடமா விரும்பினனே.           3
1985.







விடமுண்ட மிடற்றண்ணல்
     வெண்காட்டின் றண்புறவின்
மடல்விண்ட முடத்தாழை
     மலர் நிழலைக் குருகென்று
தடமண்டு துறைக்கெண்டை
     தாமரையின் பூமறையக்
கடல்விண்ட கதிர்முத்தம்
     நகைகாட்டுங் காட்சியதே.         4


புகாளனாகிய சிவபிரான், இந்திரன் வழிபடத்திருவெண்காட்டைத் தனது
இருப்பிடமாகக்கி கொண்டு எழுந்தருளியுள்ளான்.

     கு-ரை: ‘மண். . .இயமானன்’-எட்டுருவம் (அஷ்டமூர்த்தி)
‘எட்டுக்கொண்டார்’. (திருவுந்தியார்) இகபரம்-இம்மை மறுமை,
விண்ணவர்கோன்-இந்திரன். அவனும் வெள்ளானையும் வழிபட்டமை
தலபுராணத்திற்காண்க (பா.7.9.) இதில் சிவபிரான் ‘உலகினை இறந்து
நின்றது அரன் உரு . . . . . . . . மூடரெல்லாம்’-(சிவஞான சித்தியார்)
என்பதில் குறித்த விஸ்வரூபி விஸ்வாந்தர்யாமி என்னும்
இரண்டுநிலைகளை உணர்த்தியவாறு.

     4. பொ-ரை: நஞ்சுண்ட கண்டனாகிய சிவபிரான் எழுந்தருளிய
வெண்காட்டை அடுத்துள்ள தண்காட்டில் மடல்விரிந்த வளைந்த
தாழைமலர் நிழலைக் குருகு என்றெண்ணி நீர்நிலையில் வாழும்
கெண்டைமீன்கள் தாமரைப்பூவின் அடியில் மறைய அதனைக்கண்ட
கடல்முத்துக்கள் நகைப்பது போல ஒளி விடும் காட்சியால் புலப்படுகிறது.

     கு-ரை: மிடற்று அண்ணல்-திருநீலகண்டப் பெருமான். தண்புறவில்-
குளிர்ந்த முல்லை நிலத்தில். குருகு-குருகு என்னும் புள். தடம்-குளம்.
கெண்டை-மீன். பூ-பூவின் பால், விண்ட-விள்ளுதல் உற்ற. முத்தம்-
முத்துக்கள். நகை-பல், சிரிப்புமாம். கெண்டையின் அறியாமைச்செயலைக்
கண்டு கடல் நகைத்தது என்றது தற்குறிப்பேற்றம்.