1983.
|
பேயடையா
பிரிவெய்தும்
பிள்ளையினோ டுள்ளநினை
வாயினவே வரம்பெறுவ
ரையுறவேண் டாவொன்றும்
வேயனதோ ளுமைபங்கன்
வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையா ரவர்தம்மைத்
தோயாவாந் தீவினையே.
2 |
1984.
|
மண்ணொடுநீ
ரனல்காலோ
டாகாய
மதியிரவி
எண்ணில்வரு மியமான
னிகபரமு
மெண்டிசையும் |
2. பொ-ரை: மூங்கில் போன்ற திரண்ட
தோளினை உடைய
உமையம்மை பங்கன் எழுந்தருளிய திருவெண்காட்டை அடைந்து
அங்குள்ள முக்குளநீரில் மூழ்கி எழுந்து வழிபடுவாரைப் பேய்கள்
சாரமாட்டா. பேய் பிடித்திருந்தாலும் விலகும். மகப்பேறு வாய்க்கும்.
மனவிருப்பங்கள் ஈடேறுவதை இறைவர்பால் அவர் பெறுவர். சிறிதும்
சந்தேகம் வேண்டா.
கு-ரை: பேய்-பேய்கள். அடையா-சாரா.
பிரிவு எய்தும்-சார்ந்த
பேய்களும் இத்தலத்தை வழிபட்டால் நீக்கமுறும். பிள்ளையினோடு
உள்ளம் நினைவு ஆயினவே வரம் பெறுவர்- பிள்ளை வரங்கேட்டலொடு
மற்றைய வரங்களையும் மனத்தில் நினைத்தவாறே அடைவர். ஆயின-
வினையாலணையும் பெயர். ஒன்றும்-சிறிதும். ஐயுற-ஐயம் அடைய.
வேய்-மூங்கில். அன்ன-ஒத்த, இடைக்குறை. முக்குளம்-சோம சூரிய
அக்கினி தீர்த்தங்கள். தோய்வினையார்-முழுகும் செயல்லுடைய அடியார்
முதலியோர். தீவினை தோயாவாம் என்க. தோய்தல்-பீடித்தல்,
மெய்கண்டதேவநாயனார் தோற்றத்துக்கு இத்திருப்பாடல் திருவருட்
குறிப்பாயிருந்தது.
3. பொ-ரை: மண், நீர், அனல், காற்று,
ஆகாயம், மதி, இரவி,
எண்ணற்றனவாயுள்ள உயிர்கள் ஆகிய எட்டு மூர்த்தங்களுடன் இம்மை,
மறுமை, எண்திசை, பெண், ஆண் ஆகியனவாகவும் பெரியதில் பெருமை,
சிறியதில் சிறுமை ஆகியனவாகவும் விளங்கும்
|