1996.
|
மையி
னார்பொழில் சூழ நீழலில்
வாச மார்மது மல்க நாடொறும்
கையி னார்மலர்
கொண்டெழுவார் கலிக்காழி
ஐய னேயர னேயென் றாதரித்
தோதி நீதியு ளேநி னைப்பவர்
உய்யு மாறுலகில்
உயர்ந்தாரி னுள்ளாரே. 4 |
1997.
|
மலிக
டுந்திரை மேனி மிர்ந்தெதிர்
வந்து வந்தொளிர் நித்திலம் விழக்
கலிக டிந்தகையார்
மருவுங் கலிக்காழி
வலிய காலனை வீட்டி மாணிதன்
இன்னு யிரளித் தானை வாழ்த்திட
மெலியுந் தீவினைநோய்
அவைமேவுவார் வீடே. 5 |
4. பொ-ரை:
கரிய பொழில் சூழ்ந்ததும், நிழலில் மணம் கமழும்
தேன் ஒழுகி நிறைவதும், அடியவர் கைகள் நிரம்ப மலர் பறித்துக்
கொண்டு எழுவதுமான பெருமையால் மிக்க காழிப்பதியை அடைந்து
ஐயனே அரனே என்று ஆதரித்து முறையாக நினைப்பவர் உலகில்
உயர்ந்தாரில் உள்ளவராவர்.
கு-ரை:
மை-மேகம். வாசம்-மணம். ஆர்-நிறைந்த. மது-தேன்.
மல்க-நிறைய. எழுவார்-எழுந்து பூசனை செய்யும் சிவ பத்தர்கள். கலி -
ஓசை. ஆதரித்து-விரும்பி. உய்யும் ஆறு-பிறவித் துன்புறாது தப்பும் வழி.
உயர்ந்தாரின்-உயர்ந்த ஞானியரினத்துள். உள்ளார்-இருப்பவராவர்.
5. பொ-ரை:
நிறைந்து விரைந்து வரும் வரும் அலைகளில் எதிர்
வந்து ஒளிரும் முத்துக்கள் விழுந்து நிறைவதும், வறுமை நீங்கப் பொருள்
பொழியும் கையினராகிய வள்ளன்மையுடையோர் வாழ்வதுமான காழியில்
வலிய காலனை அழித்து மார்க்கண்டேயர்க்கு இன்னுயிர் அளித்த
இறைவனை வாழ்த்தத் தீவினைகள் மெலியும். வீட்டின்பம் வந்துறும்.
|