1998.
|
மற்று
மிவ்வுல கத்து ளோர்களும்
வானு ளோர்களும் வந்து வைகலுங்
கற்ற சிந்தையராய்க்
கருதுங் கலிக்காழி
நெற்றி மேலமர் கண்ணி னானை
நினைந்தி ருந்திசை பாடு வார்வினை
செற்றமாந் தரெனத்
தெளிமின்கள் சிந்தையுளே. 6 |
1999.
|
தான
லம்புரை வேதிய ரொடு
தக்க மாதவர் தாந்தொ ழப்பயில்
கானலின் விரைசேர
விம்முங் கலிக்காழி |
கு-ரை:
மலி-மிக்க. கடு-விரையும். நித்திலம்-முத்துக்கள்.
அலைமேல் நிமிர்ந்து எதிர் வந்து வந்து ஒளிரும். கலி-வறுமையை.
கடிந்த-நீக்கிய. கையார்-கொடைக்கையினர். மருவும்-பொருந்தி வாழும்.
மாணி-பிரமசாரி, மார்க்கண்டேய முனிவர். தீவினை நோயவை மெலியும்.
வீடு மேவுவர். நோய்கட்குக் காரணம் தீவினை. நோய் எல்லாம் நோய்
செய்தார் மேலவாம். நோய்செய்யார் நோயின்மை வேண்டுபவர் (குறள்).
6. பொ-ரை:
இவ்வுலகில் உள்ளோரும் வானுலகில் வாழ்வோரும்
வைகலும் வந்து கற்றறிந்த மனம் உடையவராய்க் கருதி வழிபடும்
காழிப்பதியில் நெற்றிக் கண்ணனாகிய பெருமானை நினைந்து இருந்து
இசைபாடுவோர் வினைகளைக் போக்கிக்கொண்ட மாந்தர் ஆவர் எனச்
சிந்தையில் தெளிவீர்களாக.
கு-ரை:
கற்ற-சிவபிரான் திருவடியை வழிபடக் கற்றறிந்த.
இசைபாடுவாரை வினையைத் தீர்த்தமாந்தர் (ஞானியர்) என்று
சிந்தையுள்ளே தெளிந்துகொள்மின்கள்.
7. பொ-ரை:
நன்மையும் பெருமையும் அமைந்த வேதியர்களோடு
தக்க மாதவர்களும் தொழுது வணங்க, சோலைகளின் மணம் சேர்ந்து
விம்மும் காழிப் பதியுள் ஊனுடம்புடையோர் உயிர் வாழ்தற்குப் பயனாய்
அவர்க்கு உறவாகிநின்ற ஒருவனே என்று வாழ்த்
|