|
ஊனு
ளாருயிர் வாழ்க்கை யாயுற
வாகி நின்றவொ ருவனே யென்றென்
றானலங் கொடுப்பார்
அருள்வேந்த ராவாரே. 7 |
2000.
|
மைத்த வண்டெழு
சோலை யாலைகள்
சாலி சேர்வய லார வைகலுங்
கத்து வார்கடல் சென்
றுலவுங் கலிக்காழி
அத்த னேயர னேய ரக்கனை
யன்ற டர்த்துகந் தாயு னகழல்
பத்தராய்ப் பரவும்
பயனீங்கு நல்காயே. 8
|
தினால் நலம் கொடுக்கும்
பெருமான் விளங்குகின்றான். அவனைத்
தொழுவோர் அருள் வேந்தர் ஆவர்.
கு-ரை:
தான் தொழ என்று கூட்டித் தானே தொழ என்க,
பாட்டின் முதலில் அசையாக்குதல் பொருந்தாது. நலம்-நன்மை. புரை-
பெருமை. வேதியர்க்கு அடை. வேதியரோடு மாதவர்-மறையுணர்ந்தவரும்
பெருந்தவத்தோரும். விரை-மணம். ஊனுள்-உடம்பினுள். ஆர்-பொருந்திய.
ஆருயிர் எனலுமாம்.
உயிர்வாழ்க்கையாய்-உடம்பில்
உயிர்வாழ்வது போல, உயிருள்
வாழ்கின்ற பெற்றியாகி, இருள் அடராது உள் உயிர்க்கு உயிராய்த்
தெளிக்கும் அறிவு திகழ்ந்துளது (கொடிக்கவி,) ஆன்நலம்-ஆக்கள்
(பசுக்கள்) இடத்திலிருந்து பெறும் பால், தயி்ர், நெய், ஆகிய நலங்களை.
கொடு-கொண்டு உய்ப்பார்-அபிடேகம்புரியப் பயன்படுத்தும் அன்பர்,
அருள் வேந்தர்-ஞான நாயகர்.
8. பொ-ரை:
வண்டுகள் இசைக்கும் கரிய சோலைகள், கரும்பு
ஆலைகள் நெற்பயிர் வளரும் வயல்முதலியன நிறையுமாறு வைகலும்
ஒலிக்கும் கடல் நீர் சென்றுலவும் காழிப்பதியுள் விளங்கும் தலைவனே
அரனே இராவணனை அன்று அடர்த்து உகந்தவனே உன் திருவடிகளைப்
பத்தராய்ப்பரவும் பயனை எங்கட்கு இம்மையிலேயே அருள்வாயாக.
|