பக்கம் எண் :

610

2001.







பரும ராமொடு தெங்கு பைங்கத
     லிப்ப ருங்கனி யுண்ண மந்திகள்
கருவரா லுகளும்
     வயல்சூழ் கலிக்காழித்
திருவி னாயக னாய மாலொடு
     செய்ய மாமலர்ச் செல்வ னாகிய
இருவர் காண்பரியா
     னெனவேத்துத லின்பமே.           9
2002.



பிண்ட முண்டுழல் வார்க ளும்பிரி
     யாது வண்டுகி லாடை போர்த்தவர்
கண்டு சேரகிலார்
     அழகார் கலிக்காழித்


     கு-ரை: மைத்த-கருமையுடைய. ஆலைகள்-கரும்பாலைகள்
கரும்புகளுமாம். சாலி-நெல். ஆர-நிறைய. வைகலும்-நாள் தோறும்.
கத்து-ஒலிக்கின்ற. அரக்கன்-இராவணன். அடர்த்து-நெருக்கி. உன-
உன்னுடைய. கழல் பரவும் பயன்-பத்தராய்ப் பரவும் பயன்.
ஈங்கு-இம்மையிலேயே. நல்காய்-அருள்வாய்,

     9. பொ-ரை: பருத்த கடப்ப மரங்களோடு தென்னை ஆகியன
செறிந்தனவும் பசிய வாழையினது பெரிய கனிகளைக் குரங்குகள்
உண்பனவுமான சோலைகளும், கரிய வரால் மீன்கள் துள்ளும் வயல்களும்
சூழ்ந்துள்ள காழிப்பதியுள் விளங்கும் இறைவனைத் திருமகள் நாயகனான
திருமால் செந்தாமரை மலரோனாகிய நான்முகன் ஆகிய இருவரும்
காண்பரியானாய் விளங்குவோன் என ஏத்துதல் இன்பம் தரும்.

     கு-ரை: பரு-பருத்த. மராம்-வெண்கடம்பு. கதலி-வாழை. திரு-
இலக்குமி. ஆய-ஆகிய. செய்ய மாமலர்ச் செல்வன்-செந்தாமரையில்
வீற்றிருக்கும் மறையவன் (பிரமன்), காண்பு அரியான்-காண்பதற்கு
அருமையுடையவன்.

     10. பொ-ரை: சோற்றுத் திரளை உண்டு திரிபவர்களும், சற்றும்
நீங்காது வளவிய நூலாடையைப் போர்த்துழல்பவரும் ஆகிய புறச்
சமயத்தினர், கண்டு சேரும் நல்லூழ் அற்றவர். “அழகிய பெருமிதத்துடன்
விளங்கும் காழிப்பதியில் கோவைக்கனி போலச் சிவந்த வாயினை
உடைய உமையம்மையோடு கூடியவனே, வேட்டுவக்