பக்கம் எண் :

611

தொண்டை வாயுமை யோடு கூடிய
     வேட னேசுட லைப்பொ டியணி
அண்டவா ணனென்பார்க்
     கடையா வல்லல்தானே.           10
2003.







பெயரெ னும்மிவை பன்னி ரண்டினு
     முண்டெ னப்பெயர் பெற்ற வூர்திகழ்
கயலுலாம் வயல்சூழ்ந்
     தழகார் கலிக்காழி
நயன டன்கழ லேத்தி வாழ்த்திய
     ஞான சம்பந்தன் செந்த மிழுரை
உயருமா மொழிவார்
     உலகத் துயர்ந்தாரே.             11

திருச்சிற்றம்பலம


கோலம்கொண்டவனே சுடலைப் பொடிபூசி உலகெங்கும் நிறைந்தவனே”
என்பாரை அல்லல்கள் அடையா.

     கு-ரை: பிண்டம்-சோற்றுத்திரளை, (நின்றுண்போர்) ‘நின்று
கவளம்பலகொள்கையரொடு மெய்யிலிடு போர்வை யவரும்’ (தி.3 ப.69
பா.10) சேரகிலார்-சேரும் அறிவாற்றல் இல்லாதவர். தொண்டை -கோவை
(ப்பழம்போற் சிவந்த). வேடன்-வேடுவனான சிவபிரான். அண்டவாணன்-
அண்டங்களில் வாழ்பவன்; (வாழ்நன்-வாணன்) ‘மன்றவாணன்’
‘அம்பலவாணன்’. அல்லல்தான் அடையா என்க.

     11. பொ-ரை: பன்னிரண்டு பெயர்களை உடைய ஊர் எனப்புகழ்
பெற்றதும், கயல்மீன்கள் உலாவும் வயல்சூழ்ந்து அழகு பெற்றதும் ஆகிய
காழிப்பதியில் அழகிய நடனம்புரிந்து உறைவோனாகிய பெருமானின்
திருவடிகளைப் போற்றி வாழ்த்திய ஞானசம்பந்தனின் இவ்வுரைமாலையை
உயர்வு பெறுமாறு கருதி ஓதியவர் உலகத்தில் உயர்ந்தோர் ஆவர்.

     கு-ரை: பன்னிருபெயர்களையுடைய (சீகாழிச்) சிறப்புணர்த்திற்று.
பெயர்-புகழ். நயன்-நீதி சொரூபன். நயன்-அருள் (கலி.8). நடன்-கூத்தன்.
அருட்கூத்தன், ‘ஞானக்கூத்தன்’ (சிவப். பொது.37) ‘நம்பனே நடனே’
(ப. 188 பா.4). உயருமா-உயர்ந்து அடையும் முறைமையில்.