பக்கம் எண் :

612

50. திருவாமாத்தூர்

பதிக வரலாறு:

     திருமறைச் சிறுவர், பாம்பும் நீரும் பொற்கொன்றையும் வன்னியும்
புனைந்த அங்கணரைப் போற்றிக் குலவிய இசையொடு பேரின்புறப்
பாடியது இது.

பண்: சீகாமரம்

ப.தொ.எண்: 186                             பதிக எண்: 50

திருச்சிற்றம்பலம்

2004.







குன்ற வார்சிலை நாண ராவரி
     வாளி கூரெரி காற்றின் மும்மதில்
வென்றவா றெங்ஙனே
     விடையேறும் வேதியனே
தென்ற லார்மணி மாட மாளிகை
     சூளி கைக்கெதிர் நீண்ட பெண்ணைமேல்
அன்றில் வந்தணையும்
     ஆமாத்தூ ரம்மானே.         1


     1. பொ-ரை: தென்றல் ஆர்கின்ற அழகிய மாட மாளிகைகளின்
சூளி்கைக்கு மேலாக நீண்டுயர்ந்த பனை மரத்தில் அன்றில் பறவை வந்து
தங்கி மகிழும் ஆமாத்தூர் இறைவனே! விடைமீது ஏறிவரும் வேதியனே!
மேருமலையை நீண்ட வில்லாகவும் வரிகளைஉடைய பாம்பை நாணாகவும்,
மிக்க எரியை அம்பாகவும், காற்றை ஈர்க்காகவும் கொண்டு முப்புரங்களை
வென்றது எவ்வாறு?.

     கு-ரை: குன்றம்-மேருமலை. சிலை-வில். அரா-பாம்பு.
அரி-திருமால். வாளி-அம்பு. கூர்-நுனி. எரி-அக்கினிதேவன். காற்று-
ஈர்க்காகிய வாயுதேவன். காற்று ஈர்க்கு (தி.1 ப.11 பா.6) இவற்றின்
உதவியால் மும்மதிலை வென்றவாறு எவ்வாறு? தென்றல் ஆர்கின்ற
மாடம் என்க.

     சூளிகை-வீட்டினுச்சி. பெண்ணை-பனை. அன்றில்-ஒரு பறவை.
அம்மான்-அருமகன்.