பக்கம் எண் :

613

2005.







பரவி வானவர் தான வர்பல
     ருங்க லங்கிட வந்த கார்விடம்
வெருவ வுண்டுகந்த
     அருளென்கொல் விண்ணவனே
கரவின் மாமணி பொன்கொ ழித்திழி
     சந்து காரகி றந்து பம்பைநீர்
அருவி வந்தலைக்கும்
     ஆமாத்தூ ரம்மானே.              2
2006.







நீண்ட வார்சடை தாழ நேரிழை
     பாட நீறுமெய் பூசி மாலயன்
மாண்ட வார்சுடலை
     நடமாடு மாண்பதுவென்
பூண்ட கேழன் மருப்ப ராவிரி
     கொன்றை வாள்வரி யாமை பூணென
ஆண்ட நாயகனே
     ஆமாத்தூ ரம்மானே.              3


     2. பொ-ரை: மறைவில்லாமல் சிறந்த மணிகளையும் பொன்னையும்
கொழித்துக் கொண்டு, தன்பால் வீழ்ந்த சந்தனம் கரிய அகில்
ஆகியவற்றை அடித்துக்கொண்டு வரும் பம்பையாற்று நீர் ஒழுக்கு வந்து
அலைக்கும் ஆமாத்தூர் அம்மானே! விண்ணவனே! தேவர்களும்
அசுரர்களும் கலங்கும்படித் தோன்றிய கரியவிடத்தைக் கண்டு
வெருவிப்பரவ அவ்விடத்தை நீர் உண்டு மகிழ்ந்த கருணைக்குக் காரணம்
யாதோ?

     கு-ரை: தானவர்-அசுரர். வெருவ-(அஞ்சி) அலறிப்பிதற்ற. விடம்
உண்டு உகந்த அருள் என்?. கரவு இல்-மறைவில்லா. சந்து-சந்தன மரம்.
கார் அகில்-கரிய அகில் மரம். தந்து-அடித்துவந்து. பம்பை,
திருக்கோவலூரின் கிழக்கில், அண்மையில், பெண்ணையாற்றினின்றும்
பிரியும் ஆறு.

     3. பொ-ரை: பன்றிக் கொம்பு, பாம்பு, விரிந்த கொன்றை
மலர் மாலை, ஒளியும் வரியும் பொருந்திய ஆமை ஓடு ஆகியவற்றை
அணிகலனாகப் பூண்டு ஆட்கொள்ளும் தலைவனே! ஆமாத்தூர்