பக்கம் எண் :

614

2007.







சேலின் நேரன கண்ணி வெண்ணகை
     மான்வி ழித்திரு மாதைப் பாகம்வைத்
தேல மாதவ
     நீமுயல்கின்ற வேடமிதென்
பாலி னேர் மொழி மங்கை மார்நட
     மாடி யின்னிசை பாட நீள்பதி
ஆலை சூழ்கழனி
     ஆமாத்தூர் ரம்மானே.            4


இறைவனே! நீண்ட சடை அவிழ்ந்து தொங்க, உமையம்மை பாட,
திருநீற்றை மெய்யில்பூசித் திருமால் பிரமன் முதலானோர் மாண்ட
கடைஊழியில் நீண்ட சுடலையில் நடமாடும் மாட்சிக்குக் காரணம் யாதோ?

     கு-ரை: நேரிழை-உமாதேவியார். ‘தளரிளவளரெனவுமை
பாடத்தாளமிட’ (பதி. 247-) மால் அயன்மாண்டவார் சுடலை-ஆறுகோடி
நாராயணரும் நூறுகோடி பிரமர்களும் இறந்த நீண்ட சுடுகாட்டில்.
மாண்பு-மாட்சி. என்? கேழல் மருப்பு-பன்றிக்கொம்பு. அரா-பாம்பு.
‘முற்றலாமை இளநாகமொடு ஏனமுளைக்கொம்பவை பூண்டு’ (தி.1 ப.1 பா.2).

     4. பொ-ரை: பாலையொத்த இனிய மொழிபேசும் மங்கையர்
நடனம் ஆடி இன்னிசைபாட, கரும்பு ஆலைகள் சூழ்ந்த வயல்
வளம் உடைய நீண்ட பதியான ஆமாத்தூர் அம்மானே! சேல்போன்ற
கண்ணையும் வெண்ணகையையும் மான்போன்ற விழியையும் உடைய
அழகிய உமையவளைப் பாகமாக வைத்துக் கொண்டு இயன்ற
பெரியதவத்தை மேற்கொண்டுள்ள உன் வேடம் பொருந்துமாறு எங்ஙனம்?

     கு-ரை: நேர்அன-நேரொத்த. கண்ணி-கண்ணையுடையவள். வெள்
நகை-வெண்மையுடையவாகிய பற்களையும். மான் விழி-மான்களைப் போல
மருண்ட கண்களையும் உடைய.

     திருமாதை-அழகிய உமாதேவியாரை. ஏல-பொருந்த. தவம் புரிவார்க்கு,
மங்கை பங்குடைமை முரண்பட்ட செயல் என்றவாறு. ‘பால் இன்
நேர்மொழி’-பால்போலும் இன்சொல்லை யுடைய, ஆலை-கரும்பாலை,
கரும்புமாம்.