பக்கம் எண் :

615

2008.







தொண்டர் வந்து வணங்கி மாமலர்
     தூவி நின்கழ லேத்து வாரவர்
உண்டியால் வருந்த
     விரங்காத தென்னைகொலாம்
வண்ட லார்கழ னிக்க லந்தும
     லர்ந்த தாமரை மாதர் வாண்முகம்
அண்டவாணர் தொழும்
     ஆமாத்தூ ரம்மானே.              5
2009.



ஓதி யாரண மாயநுண் பொருள்
     அன்று நால்வர்முன் கேட்க நன்னெறி
நீதி யாலநீழல்
     உரைக்கின்ற நீர்மையதென்


     5. பொ-ரை: வண்டல் மண்பொருந்திய வயல்களில்
நெற்பயிரோடு கலந்து மலர்ந்துள்ள தாமரைகள் மாதர்களின்
ஒளிபொருந்திய முகத்தைப் போலப் பூக்கும் ஆமாத்தூரில் அண்டங்களில்
வாழும் தேவர் முதலியோரால் வணங்கப்பெறும் இறைவனே! மாமலர் தூவி
நின் திருவடிகளை வணங்கிப் போற்றும் தொண்டர்கள் உணவின்மையால்
வருந்தவும், அதற்கு இரங்காததற்குக் காரணம் யாதோ?

     கு-ரை: தொண்டர் பூசித்தும் உணவின்றி வருந்துகின்றனர். அது
கண்டு இரங்காதது ஏன்? ஆமாத்தூரில் அன்றிருந்த இந்நிலைமையை
ஆசிரியர் அறிந்துபாடியருளினார்.

     வண்டல்-நீர் ஒதுக்கிவிட்டமண். ஆர்-நிறைந்த. கழனி:- கழனியில்
கலந்து மலர்ந்த தாமரைப் பூக்கள் ஆமாத்தூரிலுள்ள மாதர்களுடைய ஒளி
பொருந்திய முகம்போல இருக்கின்றன. தாமரைகள் முகம் போலப் பூக்கும்
ஆமாத்தூர் என்று பொருத்திக்கொள்க. அண்டவாணர்-அண்டங்களில்
வாழும் தேவர்கள் முதலியோர். (பதி. 185. பா. 10. இல் உள்ள
‘அண்டவாணன்’ என்பதன் பொருள் வேறு).

     6. பொ-ரை: சோதியே! சுடரே! வண்டுகள் மொய்க்கும் கொன்றை
மாலையை அணிந்தவனே! திருநின்றியூரில் விளங்கும் முதல்வனே! அரனே!
ஆமாத்தூர் இறைவனே! வேதங்களை ஓதி அவற்றின் நுண் பொருள்
அறியாது மயங்கிய சனகாதியர் அன்று ஐயம்