|
சோதி
யேசுட ரேசுரும்பமர்
கொன்றை யாய்திரு நின்றி யூருறை
ஆதியே யரனே
ஆமாத்தூ ரம்மானே. 6 |
2010.
|
மங்கை வாணுதன்
மான்ம னத்திடை
வாடி யூடம ணங்க மழ்சடைக்
கங்கையா ளிருந்த
கருத்தாவ தென்னைகொலாம்
பங்க யமது வுண்டு வண்டிசை
பாட மாமயி லாட விண்முழ
வங்கையா லதிர்க்கும்
ஆமாத்தூ ரம்மானே. 7
|
கேட்க அவர் கட்கு
ஞானமார்க்கத்தை முறையோடு ஆல் நிழலிலிருந்து உரைத்தருளிய உன் தகைமைக்குக் காரணம்
யாதோ?
கு-ரை:
ஆரணம் - வேதம். நால்வர் - சநகாதி முனிவர். நன்னெறி
- ஞானமார்க்கம். ஆலநிழல் - கல்லால் நிழல். சுரும்பு - வண்டு. ஆதி-
முதல்வன். அரன்-பிறப்பிறப்பை அழிப்பவன்.
7. பொ-ரை:
தாமரை மலரிலுள்ள தேனை உண்டு வண்டுகள்
இசைபாடப் பெரிய மயில்கள் நடனம் ஆட, விண் மேகங்களாகிய முழவை
அழகிய கையால் ஒலிக்கும் இயற்கை அழகுடைய ஆமாத்தூர் அம்மானே!
மங்கையாகிய ஒளிநுதலை உடைய மான்போன்ற பார்வதிதேவி வாடி ஊட
மணம் கமழும் சடையில் கங்கையாளை வைத்துள்ளதன் காரணம் யாதோ?
கு-ரை:
வாள் - ஒளி. நுதல் - நெற்றி. மங்கையாகிய வாணுதன்
மான் என்பது உமாதேவியாரைக் குறித்தது. வாடி ஊடுதற்குஏது, சடைமேல்
கங்கையாள் இருப்பது.
பங்கயம் - தாமரை.
மது - தேன். விண் முழவு-விண்ணிலுள்ள
மேகமாகிய மத்தளத்தை. அம் - அழகிய. அதிர்க்கும்- ஒலிக்கும், கையால்
அதிர்க்கும் என்றது பொருந்துமாறு புலப்பட்டிலது.
|