பக்கம் எண் :

617

2011.







நின்ற டர்த்திடு மைம்பு லன்னிலை
     யாத வண்ண நினைந்து ளத்திடை
வென்றடர்த் தொருபான்
     மடமாதை விரும்புதலென்
குன்றெ டுத்தநி சாச ரன்திரள்
     தோளி ருபது தானெ ரிதர
அன்றடர்த் துகந்தார்
     ஆமாத்தூ ரம்மானே.           8
2012.







செய்ய தாமரை மேலி ருந்தவ
     னோடு மாலடி தேட நீண்முடி
வெய்ய வாரழலாய்
     நிமிர்கின்ற வெற்றிமையென்
தைய லாளொடு பிச்சைக் கிச்சை
     தயங்கு தோலரை யார்த்த வேடங்கொண்
டைய மேற்றுகந்தார்
     ஆமாத்தூ ரம்மானே.           9


     8. பொ-ரை: அன்று கயிலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின்
திரண்ட இருபதுதோள்களும் நெரியுமாறு அடர்த்துப் பின் அவன்பால்
கருணை காட்டியவனே! ஆமாத்தூர் இறைவனே! மாறிநின்று மயக்கும்
ஐம்புலன்களை மனத்தால் வென்று அவித்தும் ஒருபாகத்தே
இளம்பெண்ணை விரும்பி ஏற்றுள்ளது யாது காரணத்தாலோ?

     கு-ரை: அடர்த்திடும்-வருத்திடும். ‘நின்று . . . . . அடர்த்து’ என்ற
பகுதி சிவபிரானது யோக நிலையைக் குறிப்பது. அதற்கு ஒவ்வாதபடி
இடப்பால் அம்பிகையை விரும்பிக் கொண்டது ஏன் என்று வினவினார்.
நிசாசரன்-இரவில் சஞ்சரிப்பவன், இராவணன்.

     9. பொ-ரை: உமையம்மையோடு பிச்சையேற்பதற்கு இச்சையுடையராய்
விளங்கும், தோலாடையை இடையில் கட்டிய வேடம் மேற்கொண்டு மாதரார்
இல்லங்களில் ஐயம் ஏற்று உகந்தவனே! ஆமாத்தூர் இறைவனே! செந்தாமரை
மலர்மேல் வீற்றிருக்கும் நான்முகன், திருமால் ஆகியோர் முடியையும்
அடியையும்தேட அவர்கட்கு ஒளிக்கும் வகையில் கொடிய அழலுருவாய்
நிமிர்ந்த வெற்றிக்குக் காரணம் யாதோ?