2013.
|
புத்தர்
புன்சம ணாதர் பொய்ம்மொழி
நூல்பி டித்தலர் தூற்ற நின்னடி
பத்தர் பேணநின்ற
பரமாய பான்மையதென்
முத்தை வென்ற முறுவ லாளுமை
பங்க னென்றிமை யோர்ப ரவிடும்
அத்தனே யரியார்
ஆமாத்தூ ரம்மானே. 10 |
2014.
|
வாடல்
வெண்டலை மாலை யார்த்தும
யங்கி ருள்ளெரி யேந்தி மாநடம்
ஆடன் மேயதென்னென்
ஆமாத்தூ ரம்மானைக் |
கு-ரை:
வெற்றிமை-வென்ற தன்மை. (பதி. 188 பா.8) (ஐயம்).
தையலாள்-உமாதேவியார். இச்சை தயங்கு-விருப்பம் விளங்குகின்ற.
தயங்குதோல்-அசைகின்ற தோலுமாம். அரை-திருவரையில். ஆர்த்த-
கட்டிய. ஐயம்-பிச்சையுண்டி.
10. பொ-ரை:
முத்தைவென்ற முறுவலை உடைய உமையம்மை
பங்கனே! என்று தேவர்கள் பரவிப் போற்றும் தலைவனே! காண்டற்கு
அரியவனே! ஆமாத்தூர் இறைவனே! புத்தர்களும் புல்லிய
சமணர்களாகிய அறிவிலிகளும் பொய்ம் மொழியும் நூல்களைப் பிடித்துக்
கொண்டு பழிக்கவும், அவற்றைப் பொருட்படுத்தாது பத்தர்களால்
விரும்பப்படும் மேலாந்தன்மை உடையன் அதற்குக் காரணம் யாதோ?
கு-ரை:
நூல்-பிடகம் முதலியன. அலர்-பழி. பத்தர்-அன்பர்.
பேண-விரும்ப. பரம் ஆய பான்மையது-மேலவர்க்கும் மேலாந்
தன்மையுடையது, (முழு முதன்மை). முறுவல்-பல். அரியாய்-அரியவனே
(எளியானல்லன் அன்பர் அல்லார்க்கு). அரியதில் அரிய அரியோன்.
(திருவாசகம். 3-47).
11. பொ-ரை:
தசைவாடிய வெண்டலை மாலையைக் கட்டிக்
கொண்டு நள்ளிருளில் எரிஏந்தி ஆடுவதன் காரணம் யாதோ என்று
ஆமாத்தூர் இறைவனைக் காந்தள் நாகம் போல அலரும் பசிய
|