பக்கம் எண் :

619

கோட னாக மரும்பு பைம்பொழிற்
     கொச்சை யாரிறை ஞான சம்பந்தன்
பாடல் பத்தும்வல்லார்
     பரலோகஞ் சேர்வாரே.             11

                   திருச்சிற்றம்பலம்


பொழில் சூழ்ந்த கொச்சை வயத்தலைவனாகிய ஞானசம்பந்தன் போற்றிப்
பாடிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர் மேலான வீட்டுலகம்
அடைவர்.

     கு-ரை: வாடல்-வாடுதலையடைந்த. (பதி. 196-5 பார்க்க). ஆர்த்து -
கட்டி. ஆடல்-கூத்து. மேயது-விரும்பியது. கோடல்-வெண்காந்தள். நாகம்
அரும்பு-பாம்புபோல அரும்புகின்ற. நாகம்; புன்னை மரமுமாம்.
கொச்சையார் இறை-காழியர் கோன்.

       திருஞானசம்பந்தர் புராணம்

சென்ற ணைந்துசிந் தையின்மகிழ் விருப்பொடு
     திகழ்திரு வாமாத்தூர்ப்
பொன்ற யங்குபூங் கொன்றையும் வன்னியும்
     புனைந்தவர் அடிபோற்றிக்
குன்ற வார்சிலை எனுந்திருப்
     பதிகமெய் குலவிய இசைபாடி
நன்றும் இன்புறப் பணிந்துசெல் வார்திருக்
     கோவலூர் நகர்சேர்ந்தார்.

-சேக்கிழார்.